நாட்டில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும் வேலைகள் நிலைக்குமா? அல்லது எப்போது பறிபோகுமோ? என்ற எண்ணம் பலருக்கும் இருந்து வருகிறது.
இந்த நேரத்தில் பலரின் மனதிலும் உதிப்பது குறைந்த வருமானாலும் பரவாயில்லை. அது சொந்த தொழிலாக இருக்கக்கூடாது என்பது தான்.
அதிலும் இப்படி நினைப்போரின் மனதில் உதிப்பது எம்எஸ்எம்இ என்றால் என்ன? அதனால் என்ன பயன்? என்று பல விஷயங்கள் பற்றி தெரிவதில்லை. இந்தக் கட்டுரையில் அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.
கடனுக்கு முன்னுரிமை
நீங்கள் பொதுவாக ஒரு வர்த்தகம் செய்து வந்தாலும் சரி, அல்லது பர்சனல் லோன் என பலவும் என வாங்கினாலும், அதில் எல்லாம் கிடைக்காத பலம் இந்த சிறு குறு மட்டும் நடுத்தர தொழில்களுக்கு உண்டு. அதிலும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கட்டாயமாக கணிசமான அளவு கடன் வழங்க வேண்டும் என்று நிதிகளைக் கொண்டுள்ளன. ஆக எம்எஸ்எம்இ சான்றிதழ் உள்ளவர்களுக்கு கடனில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தனியாக வங்கி உத்தரவாதம் தேவையில்லை
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்த நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்காள் மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது. தனியாக எந்த பிணையமும் தேவை இல்லை. அதுமட்டும் அல்ல எம்எஸ்எம்இகளுக்கு மின்சார சலுகைள் கூட உண்டு. அதோடு எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்த நிறுவனங்களுக்கு பேட்டன்ட், டிரேடு மார்க் ஆகியவற்றை பதிவு செய்யும் போது பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் தான்.
எம்எஸ்எம்இகளுக்கு மானியம் உண்டு
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்த நிறுவனங்களுக்கு பல மானியங்கள் உண்டு. சில குறிப்பிட்ட காலம் வரை சில வரி சலுகைகளும் உண்டு. எல்லாவற்றையும் விட பிணையம் இல்லா கடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த வகையாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை ஊக்குவிக்கும் விதமாக கைவினைப் பொருட்கள் காண்காட்சி மற்றும் வர்த்தகம் தொடர்பான நிகழ்வுகள் நிறைய நடத்தப்படுகின்றன.
உள்கட்டமைப்பு வசதிகள்
எம்எஸ்எம்இக்கள் நாட்டில் உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்கினை கொண்டமையால், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மானியமும் வழங்கப்படுகிறது. துறைகளில் அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சியில் எம்எஸ்எம்இகளால் பெறப்பட்ட தரநிலைகள் மற்றும் சான்றிதழ்களை ஊக்குவிக்க, பதிவுசெய்யப்பட்ட அனைத்து குறு மற்றும் சிறு தொழில்களும் ஐஎஸ்ஓ 9000, ஐஎஸ்ஓ 14001 மற்றும் எச்ஏசிசிபி சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஏற்படும் அனைத்து செலவுகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications