இந்திய ஃபின்டெக் மேஜரான பாரத்பே ஒரு ஆல்-இன்-ஒன் பேமென்ட் வழியை பாரத்பே ஒன் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. பாயிண்ட் ஆப் சேல், க்யூஆர் கோடு, ஸ்பீக்கர் அனைத்தையும் இந்த சேவை ஒருங்கிணைக்கிறது.
இதுபற்றி பாரத்பே கூறுகையில் இந்த தயாரிப்பை 100 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்துகிறோம். இதைத் தொடர்ந்து மேலும் 450 நகரங்களுக்கு அடுத்த 6 மாதங்களில் விரிவுபடுத்தப்படும்.

ஹைடெபனிஷன் டச்-ஸ்கிரீன் டிஸ்பிளே, 4ஜி, வைஃபை இணைப்பு, லேட்டஸ்ட் ஆண்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டம், பாரத்பே மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டையும் பாதுகாப்பையும் தருகிறது.
யூசர் பிரண்ட்லி இன்டர்பேஸ், போர்ட்டபிள் டிசைன், விரிவான டிரான்ஸாக்ஷன் டேஷ்போர்டுகள் ஆகியவற்றை ஆப்லைன் வியாபாரிகளின் தேவைக்கேற்ப பாரத்பே ஒன் வழங்குகிறது.
வியாபாரிகளுக்கான டிரான்ஸாக்ஷன்களை சீர்படுத்தும் வகையில் பாரத்பே ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட பேமென்ட்களை ஏற்கும் ஆப்ஷன்களுடன் டைனமிக் மற்றும் ஸ்டாடிக் க்யூஆர் கோடு, டாப் அண்டு பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற வழக்கமான கார்டு பேமென்ட் ஆப்ஷன்கள் இதில் அடங்கும்.
இதுபற்றி பாரத்பே சிஇஓ நளின் நெகி கூறுகையில், பல செயல்பாடுகளை ஒரு செலவு குறைந்த சாதனமாக ஒன்றிணைப்பதன் மூலம், பல துறைகளில் உள்ள சிறு, நடுத்தர வணிகங்களின் மாறுபட்ட தேவைகளுக்கு ஏற்ப விரிவான ஒரு தீர்வை நாங்கள் வழங்குகிறோம் என்றார்.
பாரத்பேயின் இடைக்கால சிஇஓவாக நளின் நெகி இருந்து வந்தார். இந்நிலையில் ஜனவரி 2023இல் பாரத்பேயின் சிஇஓ சமீர் சுஹைல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அண்மையில்தான் நளின் நெகி பாரத்பேயின் சிஇஓவாக பதவி அமர்த்தப்பட்டார்.
பாரத்பே ஒன் என்பது ஒன்-ஸ்டாப் சாதனமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரி ரிஜிஷ் ராகவன் கூறுகையில், பாரத்பே ஒன் மூலம் ஒருங்கிணைந்த, விரிவான சேவைகளை வணிகர்களுக்கு வழங்கும் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் ஃபின்டெக் துறையில் எங்களது நிறுவனத்தை ஒரு முன்னணி நிறுவனமாக ஆக்கும் என்றார். மார்க்கெட்டில் பாயிண்ட் ஆப் சேல்ஸ் சாதனங்களின் இருப்பில் பாரத்பே ஒன் தனது நிலையை வலுப்படுத்துவதற்காக இந்த ஸ்டார்ட்அப் திட்டமிட்டுள்ளது.
2020இல் சந்தையில் நுழைந்த பாரத்பே, பாரத்ஸ்வைப் எனும் கார்டு ஏற்கும் டெர்மினல் மூலம் சந்தையில் பாதி இடத்தைக் கைப்பற்றியது. 2022இல் பாயிண்ட் ஆப் சேல்ஸ் பிசினஸ் லாபகரமாக்கும் என்று அறிவித்த பாரத்பே, பாரத்ஸ்வைப் கம்பெனியின் வருடாந்திர பேமென்ட் பரிவர்த்தனையில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளதாகக் கூறியது.
இதனிடையே 2023இல் இந்த ஃபின்டெக் நிறுவனம் க்யூஆர் கோட் பேமென்ட்கள், கிரெடிட் கார்டு பில் பேமென்ட்கள், யுடிலிட்டி பேமென்ட்கள் போன்ற சேவைகள் நிறைந்த புதிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தியது.
2023 ஆகஸ்ட்டில் புதிய ஆண்டிராய்டு பிஓஎஸ் டெர்மினல், பாரத்பேஸ்வைப் ஆண்டிராய்டு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அதேவேளையில் பிஓஎஸ் நெட்வொர்க்கை இரட்டிப்பாக்கி ஒரே ஆண்டுக்குள் 2 லட்சம் பிஓஎஸ் சாதனங்களை நாட்டின் 400 நகரங்களில் நிறுவப் போவதாகவும் அறிவித்தது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications