மும்பை: கடந்த 210ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் வர்த்தகத்தின் அளவும் மற்றும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஓ சந்தை குறைந்தது 40 நிறுவனங்கள் பட்டியலிடப்படலாம் என மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
அதேபோல் சிறு மற்றும் குறு நிறுவன (எஸ்எம்இ) பட்டியலில் 100 நிறுவனங்கள் வரை பட்டியலிடப்படலாம் எனவும் பிஎஸ்ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2014-15ம் நிதியாண்டில் மும்பை பங்குச் சந்தையில் 6 முக்கிய ஐபிஓ-க்களும், எஸ்எம்இ பிரிவில் 35 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனங்கள் திரட்டிய மொத்த தொகை ரூ.1,200 கோடியாகும்.
ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 10 மடங்குக்கு மேல் நிதி திரட்ட வாய்ப்பு இருப்பதாகப் பிஎஸ்இ அமைப்புத் தலைவர் ஆஷிஷ் குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுவரை 53 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன, இதில் 26 எஸ்எம்இ நிறுவனங்களும் அடக்கம்.
மேலும் பல முக்கிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் திட்டம் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன குறிப்பாக ஈகாமர்ஸ், இண்டர்நெட் நிறுவனங்கள்.


Click it and Unblock the Notifications