இந்திய ஸ்டார்ட்அப் துறையின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் ஸ்டார்ட்அப் எகோசிஸ்டத்தையும், ஸ்டார்ட்அப் துறையில் இன்னோவேஷனையும் மேம்படுத்தும் பயணத்தில் உள்ளது. இந்த வளர்ச்சியைப் பெரிய அளவில் கொண்டு செல்ல அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் வேளையில் இத்துறைக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் "ஏஞ்சல் டேக்ஸ்" நீக்கம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
ஏஞ்சல் டேக்ஸ் என்பது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில், இந்திய முதலீட்டாளர் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்றும் போது விதிக்கப்படுவை. அதாவது பங்குகளை வைத்து திரட்டப்பட்ட தொகைக்கு வருமான வரி விதிக்கப்படுவது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 56(2)(viib) இன் கீழ் இத்தகைய நிதி திரட்டலை "income from other sources" என்று கருதி அதற்கு 30% வரி விதிக்கிறது.

இது ஸ்டார்ட்அப்களை எவ்வாறு பாதிக்கிறது?
இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும்பாலும் நிதி திரட்டுவதே பெரும் தலைவலியாக இருக்கும் வேளையில், அவற்றின் அதித செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேல் வரிச்சுமை என்பது அதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. தற்போது ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்பட்டது மூலம் திரட்டப்பட்ட முதலீட்டை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த வரி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்குகளின் "நியாயமான சந்தை மதிப்பு" மீது செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த மதிப்பீடு குறித்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், வருமான வரி அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் வேளையில், ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்படுவது மூலம் இனி மதிப்பீடு குறித்து பிரச்சனை இருக்காது.
வளர்ச்சியைத் தடுக்கிறது: கூடுதல் வரிப் பொறுப்பு முதலீட்டை ஊக்கப்படுத்தலாம், அரசாங்கம் ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதுமை மற்றும் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
சர்வம் லாபம்..
ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்பட்டது மூலம் இப்போது ஏஞ்சல் முதலீட்டிற்கு மிகவும் ஆதரவான சூழலை உருவாக்கும். எனவே மதிப்பீடு, வரி பிரச்சனை இல்லாமல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இனி தங்குதடையின்றி முதலீடு செய்ய முடியும்.
மேலும் இந்த ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்பட்டது மூலம் இனி வெளிநாட்டு முதலீடுகளுக்கு இணையாக உள்நாட்டு முதலீட்டாளர்களும் களத்தில் இறங்க முடியும். இதேபோல் இந்த வரி நீக்கத்தால் ஒவ்வொரு முதலீட்டு திரட்டிலிலும் கூடுதல் தொகை கிடைக்கும் காரணத்தால் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications