வீட்டிலிருக்கும் பெண்கள் ஆன்லைன் மூலம் சுலபமாகவும், அதேசமயம் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். வீட்டிலிருந்து கொண்டு எந்த மாதிரியான தொழில் தொடங்குவது, எப்படி அதை மார்க்கெட்டிங் செய்வது என்பது குறித்து இனி விரிவாகக் காணலாம்.
குறைந்த முதலீட்டில் என்னென்ன தொழில் தொடங்க முடியும்?
சோப்பு தயாரித்தல்.
கைவினைப் பொருட்கள்
வாழ்த்து அட்டைகள்
ஆன்லைன் ஃபேஷன் பொட்டிக் போன்ற இன்னும் பல தொழில்கள் உள்ளன.
வீட்டிலேயே சோப்பு தயாரித்தல்!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் சோப்பு முக்கியமான ஒன்றாகும். அதில் சலவை சோப்பு, குளியல் சோப்பு, மற்றும் மருத்துவக் குணம் அடங்கிய சோப்புகள் அடங்கும். இதில் நீங்கள் மூன்று வகைச் சோப்புகளையும் வீட்டிலிருந்தே தயாரிக்கலாம்.
ஆனால் அதற்கு முறையாகப் பயிற்சி எடுக்க அங்கீகாரம் பெற்ற வகுப்புகளுக்குச் சென்று பயின்று, அதன்பின் பாதுகாப்பாகவும், போதிய உபகரணங்களுடன் தொழிலை வீட்டில் தொடங்கலாம். இதற்கு உங்களுக்கு ரூ.50 முதல் ரூ.1 லட்சம் வரை பயிற்சி மற்றும் தொழில் தொடங்க தேவைப்படும்.
ஆன்லைன் ஃபேஷன் பொட்டிக்!
உங்களுக்கு ஃபேஷனில் ஒரு கண் இருந்தால், உங்கள் ஆர்வத்தையும் திறமையையும் பயன்படுத்திக் கொள்ள ஆன்லைன் boutique-ஐ நடத்துவது ஒரு சிறந்த வழியாகும். 2024 ஆம் ஆண்டுக்குள் ஆடைத் தொழில் 153 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடும் என்று புள்ளிவிவரம் மதிப்பிட்டுள்ளது.
மேலும் உங்கள் தயாரிப்புகளை Meesho மற்றும் Amazon போன்ற தளங்களிலும் சந்தைப்படுத்தலாம். அதனால் உங்களின் தொழில் வளர்ச்சி என்பது உயர்ந்து, நீங்கள் அதிக வருமானம் ஈட்ட வழிவகுக்கும். முக்கியமாக ஃபேஷன் தொழில் ஒரு பெரிய சந்தையாகும், எனவே ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கும் போது எப்போதும் கவனம் செலுத்துவது நல்லது.
கைவினைப் பொருட்கள்!
கையால் செய்யப்பட்ட மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களுக்குச் சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. ஏனென்றால், பல நுகர்வோர் உண்மையான மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருட்களையே விரும்புகின்றனர். மனிதத் தொடுதலுக்கான ஏக்கம் உள்ளது. எனவே தனித்துவமான மற்றும் தனிப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனை செய்தால் நல்ல வருமானம் பெறலாம்.
கைவினைப் பொருட்களில் குக்கீகள், மணி வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், கையால் செய்யப்பட்ட ஆடைகள், வாசனை மெழுகுவர்த்திகள், விளையாட்டுப் பொம்மைகள், நெசவுகள் போன்றவை இருக்கலாம். பொருட்களை நீங்களே தயாரிக்கும் திறன் உங்களுக்கு இருந்தால் அது உங்களுக்குக் கூடுதல் லாபத்தைக் கொடுக்கும்.
இப்போதுள்ள காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் பொருட்களைச் சந்தைப்படுத்துதல்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. அதனால் கொஞ்சம் கிரியேட்டிவ் மைண்டுடன் அதில் உங்கள் தயாரிப்புகளை, பொருட்களை விளம்பரம் செய்தால் கண்டிப்பாக நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
வாழ்த்து அட்டை பிரிண்ட்டுகள் விற்பனை!
உலகம் இப்போது தங்கள் செய்திகளை அனுப்பத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்றாலும், பெரும்பாலான மக்கள் தனிப்பயனாக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை அனுப்ப விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒன்பது குடும்பங்கள் வாழ்த்து அட்டைகளை வாங்குவதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.
சமீபத்தில் சாலைகளில் தனியாகச் சோகமாக இருப்பவர்களிடம் துருப்பு சீட்டுகளில் நிம்மதியான வாக்கியங்களை எழுதிக் கொடுக்கும் வீடியோக்கள், செய்திச் சேனல்கள் தொடங்கி இன்ஸ்டாகிராம் வரை வைரலாகி வருகிறது. அதனால் மக்களை ஊக்கப்படுத்தும் வாக்கியங்கள் அடங்கிய அட்டைகளுக்கான வரவேற்பும் கூடியுள்ளது. எனவே, இந்தத் தொழிலும் நல்ல ஆப்சன்தான். மேலும் இத்தொழில் துவங்க குறைந்த பணமே செலவாகும்.
உங்கள் இலக்கும், பிசினஸ் ஐடியாவும், மார்க்கெட்டிங் உக்திகள் சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் செய்யும் தொழில் வெற்றி பெறலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications