MSME -க்கள் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்ய முடியுமா? எப்படி வணிகத்தை விரிவுபடுத்துவது?

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் எம்.எஸ்.எம்.இ (MSMEs) -க்கள், இல்லையென்றால் பெரும் நிறுவனங்களின் வணிகம் பெரியளவில் பாதிக்கப்படலாம். அந்தளவுக்கு இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து வரும் எம்.எஸ்.எம்.இ-க்கள், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளும் ஏற்றுமதி மற்றும் சர்வதேச வணிகத்தில் எம்.எஸ்.எம்.இ-க்களை ஈடுபட ஊக்குவிக்கின்றன.

வெளிநாடுகளில் தொழில் செய்ய என்னென்ன வழிகள்?: எம்.எஸ்.எம்.இ-க்கள் சர்வதேச அளவில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த பல வழிகள் உண்டு.

MSME -க்கள் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்ய முடியுமா? எப்படி வணிகத்தை விரிவுபடுத்துவது?

ஏற்றுமதி:
எம்.எஸ்.எம்.இ -க்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அது வெளிநாடு வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கும் நேரடியாக அனுப்பலாம். இதன் மூலம் அவர்களது வணிக எல்லையை அவர்களே தீர்மானிக்கலாம்.

கூட்டணி வைக்கலாம்:
இந்தியாவிலுள்ள ஒரு எம்.எஸ்.எம்.இ நிறுவனம், வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து, ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக செயல்படலாம். அப்படி இல்லையேல் அங்கேயே ஒரு நிறுவனத்தை அமைத்து ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இந்திய நிறுவனங்கள் மேம்பட்ட தரத்துடன் உற்பத்தியை பெருக்கலாம். அவற்றை மற்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.

கிளை அமைக்கலாம்:
இந்திய நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் தான் வணிகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாட்டிலும் உங்கள் நிறுவனத்தின் கிளையை அல்லது துணை நிறுவனங்களைத் தொடங்கலாம். அதன் மூலம் அங்கிருந்து நேரடியாக சந்தைப்படுத்தலாம். சந்தையை விரிவுபடுத்தலாம். விநியோக சங்கிலியை நீட்டிக்கலாம். மொத்தத்தில் இங்கிருந்தே உலகின் எந்த மூலைக்கும் வணிகத்தை தொடரலாம்.

வெளிநாட்டில் வணிகம் செய்ய சலுகை உண்டா?- சர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களை சந்தைப்படுத்த, இந்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

  1. குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் வர்த்தக கண்காட்சிகளில் கலந்து கொள்ள, எம்.எஸ்.எம்.இ -க்களுக்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. இதன் மூலம் வாங்குபவர் மற்றும் விற்பவர் நேரடியாக சந்தித்துக் கொள்ளவும், பொருட்களை எளிதில் சந்தைப்படுத்தவும் முடியும்.
  2. ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும் விதமாக, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணம் கிடைக்காத அபாயத்திலிருந்து எம்.எஸ்.எம்.இ -களைப் பாதுகாக்க இசிஜிசி (ECGC) காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.
  3. சர்வதேச ஒத்துழைப்பு திட்டம் (International Cooperation Scheme) மூலம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான ஆதரவு வழங்கப்படுகிறது.
  4. மின்னணு வர்த்தக பயிற்சி (E-Commerce Training): அமேசான் போன்ற உலகளாவிய இ-காமர்ஸ் தளங்கள் மூலம் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான வழிகாட்டுதல் மற்றும் தேவையான பயிற்சியை எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் வழங்கி வருகிறது. இதுபோன்ற பல்வேறு சலுகைகள் மூலம் எம்.எஸ்.எம்.இ-க்களை இந்திய அரசானது ஊக்குவித்து வருகிறது. ஆக சர்வதேச நாடுகளில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடும் நிறுவனங்கள், அரசின் திட்டங்களை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.

சவால்களும் உண்டு?
வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது நல்ல விஷயம் தான் என்றாலும், அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. ஏனெனில் வெளிநாடுகளில் சந்தைப்படுத்த போதிய திறன் இருத்தல் அவசியம். சந்தை பற்றிய புரிதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தேவையான நிதி அணுகுதல் அவசியம். இந்தியாவிலுள்ள சட்ட திட்டங்கள் வேறு. வெளிநாட்டில் வேறு. அவர்களின் வர்த்தக நடைமுறைகளும் வேறு. வரி விதிமுறைகள் வேறு. மொத்தத்தில் எல்லை தாண்டிய நடைமுறைகள் அனைத்தும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அதையும் தாண்டி சர்வதேச வணிகத்தில் ஈடுபட இறக்குமதி, ஏற்றுமதி குறியீடானது (IEC) பெறுவது அவசியம். இது சர்வதேச நாடுகளில் வர்த்தகம் செய்ய கட்டாயம் தேவை. சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஏதேனும் (EPCG and RoDTEP) சலுகை அளித்துள்ளதா என பார்த்து அதன் மூலமும் பயனடையலாம்.

எப்படி சர்வதேச சந்தையில் நிலை நிறுத்திக் கொள்வது?
எம்.எஸ்.எம்.இ ஆக இருந்தாலும் சரி, பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், தரமான பொருட்களை கொடுத்தால், சர்வதேச சந்தையை எளிதாக ஈர்க்க முடியும். அதோடு அதிக தேவை இருக்கும் பொருட்களாக தேர்வு செய்ய வேண்டும். ஏற்றுமதிக்கான உங்கள் தயாரிப்பு அல்லது சேவைக்கு அதிக தேவை இருக்கும், வெளிநாட்டு சந்தைகளைக் கண்டறியவும். இதை Trade4MSMEs போன்ற சர்வதேசத் தளங்களைப் பயன்படுத்தி சந்தை நுண்ணறிவைப் பெறலாம்.

மேலும் நீங்கள் தேர்ந்தெடுத்த சந்தையில் ஏற்கனவே உள்ள போட்டி நிறுவனங்கள், அவர்களின் விலை நிர்ணயம் மற்றும் தரநிலைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும். தேர்ந்தெடுத்த நாட்டின் தரச்சான்றிதழ்கள், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு (உதாரணமாக, CE Marking, ISO Standards) உங்கள் தயாரிப்புகள் இணங்குவதை உறுதி செய்யவும்.

நேரடியாக அணுகுவது சிறந்த வர்த்தக யுக்தியாக இருந்தாலும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இன்றைய காலத்திற்கு தேவையான யுக்தியாகும். ஏனெனில் உலகளாவிய வாடிக்கையாளர்களை அடைய, உங்கள் பிராண்டின் தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தலாம். அப்படி செய்யும் போது சர்வதேச வாடிக்கையாளர்களையும் எளிதில் அடைய முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+