சென்னையில் மட்டும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வாயிலாக சுமார் 5,567 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் கனவிற்கு அடித்தளம் அமைப்பதே MSME நிறுவனங்கள் தான்.
இந்த 5,567 கோடி ரூபாய் முதலீடுகள், வாகன உதிரிபாகங்கள், பாதுகாப்பு, எலக்ட்ரானிக்ஸ், ஐடி மற்றும் பிற தொழில்களில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுவதற்கு முதலீடு செய்யப்பட உள்ளது.

சென்னை மாவட்டத்தில், சுமார் 293 MSME நிறுவனங்களுடன் சுமார் 5,566.92 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. மேலும் MSME துறையில் இலக்கை விடவும் அதிக முதலீடு திரட்டப்பட்டு உள்ளதாக MSME துறை அமைச்சர் டிஎம் அன்பரசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் MSME நிறுவனத்தின் வாயிலாக 4368 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 5,566.92 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் சுமார் 26,447 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.
MSME துறையில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு அரசு முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு இன்வெஸ்ட்மென்ட் ரோட்ஷோ அதாவது முதலீடு மற்றும் தொழிற்துறை வாய்ப்புகளை முன்வைத்து புதிய நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்க்கும் முயற்சி.
இத்தகைய இன்வெஸ்ட்மென்ட் ரோட்ஷோக்களை நடத்துவதன் மூலம் புதிய முதலீடுகளையும், புதிய நிறுவனங்களை அமைக்க தமிழ்நாடு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இந்த ரோட்ஷோக்களில், அரசு அதிகாரிகள் வணிக நிறுவனங்களைச் சந்தித்து, அவர்களின் முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
சென்னை மண்டலத்தில் MSME வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் ஒரு முக்கிய ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடுகள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications