கடந்த வாரம் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தற்போதைய நிதியாண்டில் 7.3 சதவீதமாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு சீன நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவால், இந்தியா தற்பொழுது உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. சிறிய நிறுவனங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றன. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP), இந்த வகை நிறுவனங்களின் பங்களிப்பு 17 சதவீதம் ஆகும். அதுமட்டுமில்லாமல் நாட்டின் மொத்த ஏற்றுமதியில், இந்நிறுவனக்களின் 40 சதவீத பங்களிப்பை அளிப்பதுடன் 110 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
இந்தியா ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை:
கடந்த 2018 -2019 யூனியன் பட்ஜெட்-ல் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்பை பெருக்கவும் சுமார் 6,552.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஏனென்றால் இந்நிறுவனங்களின் வளர்ச்சி நாட்டில் பெரிய அளவில் நிச்சயமாக வேலைவாய்ப்பை உருவாகும் என்று பெரிதும் நம்பப்பட்டது. ஜி.எஸ்.டி எனப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வந்த முதல் பட்ஜெட் அதுவாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான எஸ்.பி.ஐ-ன் ஆய்வு அறிக்கையின்படி, ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்டு 15 மாதங்களுக்கு பின்பு வந்த இந்த பட்ஜெட்டினால் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் உதவி மிகவும் அதிகரித்தது. இது ஜிஎஸ்டிக்கு முன்னர் வழங்கப்பட்ட 25,700 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, இந்த பிரிவிற்கு கடன் மதிப்பு ரூபாய் 1.23 லட்சமாக 5 மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு கடன் அளவு அதிகரித்தது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நீண்ட கால பலன்களை தரவாளதாக இருந்தாலும், IANS அல்லது இந்திய ஆசிய செய்தி சேவை நிறுவனத்தின் ஒரு அறிக்கையின்படி, இந்த திட்டத்தை பற்றி இந்திய ரிசர்வ் வங்கியானது இந்திய நிதி அமைச்சகத்தை எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக மோடி அரசின், சிறந்த திடமாக கருதப்படும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பெறப்படும் இந்த கடன்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையின் அடுத்த செயயல்பட முடியாத சொத்துக்களாக (NPAs) மாறி வருகின்றன. இந்த மோசமான கடன்களின் மதிப்பு மிகவும் வேகமாக உயர்ந்து, தற்பொழுது 11,௦௦௦ கோடிகள் என்ற அளவில் உள்ளது. 2015 -ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி வங்கிகள், ரூ, 10 லட்சம் வரை மைக்ரோ மற்றும் சிறிய தொழில் நிறுவன முனைவோருக்கு கடன் உதவி அளிக்க வழிவகை செய்கிற! து.
அறிஞர்கள் சொல்வது என்ன?
அதோடு நில்லாமல், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் இந்த வகை துறைகளுக்கு இன்னும் கூடுதலான ஆதரவு தேவை என வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளுக்கும், இதுவரை வழக்கப்பட்டுள்ள கடன் அளவிற்கும் இடையே சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இடைவெளி உள்ளது. இதனை சமன்செய்ய வேண்டும் எனவும் அறிஞர்கள் விரும்புகிறார்கள்.
உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் (IL &FS) மட்டும் பிஎன்பி பிரச்சினைகளுக்கு பின்பு செயல்படுத்த முடியாத சொத்துக்களின்(NBA) பிரச்சனை இந்த நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக விஸ்வருபம் எடுத்துள்ளது. தற்பொழுது வரவிருக்கும் 2019 ஆம் ஆண்டு இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், இந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க ஆதரவை பெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதனை மோடி அரசும், நிதி அமைச்சர் அருண் ஜென்டலி-யும் கருத்தில் கொண்டு, நாட்டின் முன்னேற்த்திற்கு உறுதுணையாக இருக்கும் இது போன்ற நிறுவனங்களை கவனத்தில் கொண்டு பட்ஜெட்-ஐ வடிவமைத்தால் நிறைய புதிய தொழில் முனைவர்கள் பயன் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications