எம்.எஸ்.எம்.இ (MSME)-க்களுக்கான கடன்களுக்கும் சிபில் ஸ்கோர் அவசியம். கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனாளியின் கடன் தகுதியை தெரிந்து கொள்ள சிபில் ஸ்கோரை பார்க்கின்றனர். எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான கடனிற்கு சில நிறுவனங்கள் கடன் தகுதியை மதிப்பிட டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) மற்றும் சிட்பி (SIDBI) இணைந்து உருவாக்கியுள்ள சிபில் எம் எஸ் எம் இ (Cibil MSME) முறையையும் பயன்படுத்துகின்றன.
குறைந்தபட்ச சிபில் ஸ்கோர்?:
பொதுவாக பெரும்பாலான கடன் வழங்கும் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ-களுக்கு கடன் வழங்க குறைந்தபட்சம் 700 சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 650 - 685 சிபில் ஸ்கோர் இருந்தால் கூட கடன் வழங்குகின்றன. ஆனால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம். இது ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்து மாறுபடலாம். இருப்பினும் பொதுவான வரம்பு என ஒன்று உள்ளது.

அதாவது சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் மிக சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு கடன் வழங்க வாய்ப்புகள் அதிகம். வட்டியும் குறைவாக இருக்கும். இதுவே 700 - 749 நன்றாக உள்ளதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலான நிதி நிறுவனங்கள் இதை சிறந்த ஸ்கோராக எடுத்துக் கொள்கின்றன.
650 - 699 சராசரி சிபில் ஸ்கோராக பார்க்கப்படுகிறது. இந்த விகிதத்தில் உள்ளவர்களுக்கு கடன் வழங்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும்.
650-க்கு கீழ் இருந்தால் மோசமான சிபில் ஸ்கோர் ஆகும். அப்படி இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு கடன் நிராக்கரிப்படலாம். ஆக பிணையத்துடன் கூடிய மாற்றுக் கடன்களுக்கு முயற்சிக்கலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?:
எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு கடன் ஒப்புதல் கிடைத்தாலும், அவர்களுக்கான வட்டி விகிதம் என்ன, செயல்பாட்டு கட்டணம் உள்ளிட்ட மற்ற கட்டணங்கள் எவ்வளவு என தெரிந்து கொள்ள வேண்டும். முத்ரா லோன் போன்ற பிரத்யேக திட்டங்களில் வட்டி சற்று குறைவாக இருக்கலாம். ஆக தொழில் முனைவோர் தங்களுக்கு அதுபோன்ற திட்டங்கள் பொருந்துமா என்பதையும் முழுமையாக தெரிந்து கொண்டு, பின்னர் வணிக கடனை நாடலாம்.
ஒரு தனி நபர் அல்லது நிறுவனமாக இருந்தாலும், செயலில் உள்ள உதயம் பதிவு வைத்திருக்க வேண்டும். அவர்கள் குறு நிறுவனமா அல்லது சிறு நிறுவனம், நடுத்தர நிறுவனம் என எதுவாக இருந்தாலும், எம்.எஸ்.எம்.இ வகைகளின் கீழ் இருந்தால் போதுமானது.
பெரும்பாலான வங்கிகள் எம்.எஸ்.எம்.இ-களுக்கு கடன் வழங்க விரும்பினாலும், குறைந்தபட்ச, ஒரு வருடத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை வணிகம் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆக நீண்ட காலமாக வணிகத்தில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அப்படியானால் புதிய நிறுவனங்களுக்கு கடன் கிடைக்காது என்றில்லை. புதிய நிறுவனங்களுக்கு முத்ரா போன்ற குறிப்பிட்ட திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வருமானத்தின் நிலைத்தன்மையை காட்டுவதற்காக விண்ணப்பதாரர்கள், பொதுவாக கடந்த 1 முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான ஐடிஆர் விவரங்களை வழங்க வேண்டும். இது உங்கள் வணிகத்தின் விற்றுமுதல் மற்றும் லாபத்திற்கு ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) திட்டத்தின் காரணமாக, சில கடன்களுக்கு (குறைந்த வரம்பு கொண்டவை) பிணையம் தேவையில்லை. அவை அரசு ஆதரவு திட்டங்களின் கீழ் வருகின்றன. இருப்பினும், அதிக கடன் தொகைகளுக்கு பிணையம் தேவைப்படலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் எம்.எஸ்.எம்.இ -கடன்களை அங்கீகரிக்க சரியான ஆவணங்களை பராமரிப்பது மிக அவசியம். பொதுவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடையாளச் சான்று, வசிப்பிட சான்று, வணிக முகவரி சரிபார்ப்பு, நிறுவன பதிவு சான்றிதழ், வருமான வரி அறிக்கைகள் மற்றும் உத்தரவாதம் அளிப்பவரகளின் சொத்து விவரங்கள் பற்றிய ஆவணங்கள், ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவும் தேவைப்படலாம். இது பொதுவான அறிக்கை மட்டுமே. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!:
கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பே சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி, தெளிவாக அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு அதன் பிறகு கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பாக உங்கள் வணிகத்திற்கு அரசின் பிரத்யேக திட்டங்கள் மூலம் பயன் பெற முடியுமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பொருந்தினால், மானியத்துடன். பிணையம் இல்லாமல் கடன் பெற முடியும். வட்டியும் சற்று குறைவாக இருக்கலாம். சில திட்டங்களில் குறு நிறுவனங்களுக்கு கடன் தடை காலம் கூட அவகாசமாக கொடுக்கப்படுகின்றன. ஆக இதுபோன்ற சலுகைகள் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகே வங்கிகளில் நேரடியாக அணுகலாம். உங்கள் வணிகத்திற்கு எந்த மாதிரியான அரசின் சலுகைகள் எல்லாம் கிடைக்கும் என, மாவட்ட எம்.எஸ்.எம்.இ மையங்களை நாடினாலே தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications