இந்தியாவின் தொழில் வளர்ச்சியைக் கொண்டாடும் ஃபேஸ்புக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட ஆமாங்க, அவர்களுக்கு அதிக அளவில் சம்பந்தம் இருக்கின்ற இந்தியாவில் தான் இந்த சம்பவத்தை திட்டமிட்டு இருக்கிறார்கள். வரும் அக்டோபர் 9-ம் தேதி இந்தியாவின் ஸ்டார்ட் அப் டே-ஆக கொண்டாட இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

 

யாரை பாராட்ட

யாரை பாராட்ட

இன்றைய சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு டெக்னாலஜி கொண்டு தீர்வு கண்ட தொழில் முனைவோர்கள் மற்றும் பிறக்காத குழந்தையை வடிவமைத்து பெற்றெடுத்து இன்று சமூகம் போற்றும் ஒருவனாக தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுத்தவர்களின் வெற்றிக் கதைகள்... இப்படிப் இன்னும் பல விஷயங்களை திட்டமிட்டு அடுக்க இருக்கிறது ஃபேஸ்புக்.

அப்புறம்

அப்புறம்

அடுத்த தலைமுறை ஸ்டார்ட் அப்களை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும், ஸ்டார்ட் அப்களுக்குத் தேவையான பாலிசிகளை வடிவமைப்பவர்கள், தி பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட் ஐடியாக்கள் என்ன, வருங்காலங்களில் எந்த துறைகள் எல்லாம் நமக்கு காசை வாரி இறைக்கும் என்று பல சுவாரஸ்யமான டாப்பிக்குகளில் உறையாட, விவாதிக்க இருக்கிறார்கள்.

 ஏன் இந்தியாவில்
 

ஏன் இந்தியாவில்

உலகிலேயே ஃபேஸ்புக் கணக்கின் படி இந்தியா தான் மூன்றாவது மிகப் பெரிய ஸ்டார்ட் அப் டெஸ்டினேஷன் (Startup destination). அதோடு ஏகப்பட்ட டெவலெப்பர்களும் இந்தியாவில் தான் இருக்கிறார்களாம். இந்தியா, தன் வளர்ச்சிக்கு தன்னால் ஆன அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களை கையாண்டு வருவதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது.

 இதற்கு முன்

இதற்கு முன்

இந்த ஸ்டார்ட் அப் டே திட்டத்துக்கு முன்னாலேயே ஃபேஸ்புக் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களோடு நெருங்கிப் பழகி, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள், வழிகாட்டுதல்களை எல்லாம் வழங்கி வந்திருக்கிறது. எனவே அதன் மறு உருவம் தான் இந்த ஸ்டார் அப் டே என்று ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook is going to celebrate indian start up day on october 09th 2018

Facebook is going to celebrate indian start up day on october 09th 2018
Story first published: Wednesday, September 26, 2018, 16:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X