ஜிலிங்கோ அங்கிதி போஸ் கொடுத்த புகார்.. மீண்டும் வெடித்தது பிரச்சனை..!

ஜிலிங்கோ நிறுவனர் அங்கிதி போஸ், தன்னை ஏமாற்றி, மோசடி செய்து, பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக நிறுவனத்தின் இணை நிறுவனர் துருவ் கபூர், முன்னாள் தலைமை செயல் அதிகதாரி ஆதி வைத்யா மீது மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தனது ஆறு பக்க புகாரில் போஸ், கபூரும், வைத்தியாவும் சேர்ந்து மோசடி வேலைகளை செய்து தன்னையும் தனது நிறுவனத்தின் முதலீட்டாளர்களையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் தனது பங்குகள் மற்றும் வியாபாரத்தை மோசடியாக விற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜிலிங்கோ அங்கிதி போஸ் கொடுத்த புகார்.. மீண்டும் வெடித்தது பிரச்சனை..!


இதுபற்றி துருவ் கபூர் கூறுகையில், என் மீது அங்கிதா போஸ் சொல்லும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அதில் உண்மையில்லை. தவறானவையாகும். தீர விசாரித்ததில் அவர் செய்யும் தவறுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் பழிவாங்கும் செயலாகும்.

ஜிலிங்கோவில் எனது பங்கில் நான் எப்போதும் நேர்மையைக் கடைப்பிடித்துள்ளேன். எனது நிறுவன போர்டு அங்கீதாவின் தவறான செயல்கள் பற்றி விசாரிக்க உதவியுள்ளேன்.

தொழில்முறை உறவுகளையும் எங்களது தயாரிப்புகளையும் நியாயமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.
ஆதி வைத்யா கூறுகையில், செய்திகளில் வெளியானபடி என் மீது அங்கிதா போஸ் சொல்லும் குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை.

உண்மையில்லை. தவறான நோக்கத்துடன் இதை அவர் செய்துள்ளார். எனது கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் என்னை துன்புறுத்தவும் இவ்வாறு போஸ் செய்துள்ளார் என்றார்.

போர்டு அறையில் நிகழ்ந்த நீண்ட நெடிய வாதங்களுக்குப் பிறகு கம்பெனியின் தலைமை செயல் அதிகாரியான போஸ் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரியில் ஜிலிங்கோ நிறுவனம் கலைப்பு நடவடிக்கையில் இறங்கியது.

சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட உயர்நிலை ஸ்டார்ட்அப்களில் ஒன்றாக ஜிலிங்கோ இருந்தது. யூனிகார்ன் மதிப்பீட்டில் அதிக நிதியை ஈட்டும் என்ற நிலையில் கம்பெனி உடைந்தது.
2022 ஜூனில் சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட பிசினஸ்-டு-பிசினஸ் இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் ஒன்று கலைக்கப்பட இருந்தது. இந்த நிலையில் போஸ் மற்றும் கபூர் ஒரு நிர்வாக கொள்முதல் வாய்ப்பை பெற ஒன்று சேர்ந்தனர்.

தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஆதி வைத்யா, எனக்கு நஷ்டம் விளைவிக்கும் பேரங்களை பொய்யாகக் கூறி, என் பெயரில் பல்வேறு தரப்பினருக்கு வர்த்தகக் கடன் வழங்கி, தவறான நடத்தையில் ஈடுபட்டார்.

எனது முந்தைய நிறுவனத்தில் அனைத்து பரிவர்த்தனைகளும் அவரது பெயரில் நடத்தப்பட்ட போதிலும், முதலீட்டாளர்களிடம் என்னை பொய்யாக சிக்க வைத்து என்னை அச்சுறுத்துவதற்காக அவர் அந்த ஒப்பந்தங்களைப் பயன்படுத்தினார்.

கபூர் மற்றும் வைத்யா சில டேட்டாக்களை குழுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் பல்வேறு நிறுவனம் தொடர்பான டேட்டா மற்றும் தகவல்களை மறைப்பதன் மூலம் தந்திரமாக செயல்படுகின்றனர்.

துருவ் கபூர், ஆதி வைத்யா ஆகியோர் எனது பெயரில் போலியான வாட்ஸ்அப் செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதன் மூலம் தெரியாத நபர்களுடன் சேர்ந்து என்னைத் துன்புறுத்துவதற்காக சதி செய்து, மோசடியாக கையகப்படுத்தியதாக நான் நம்புகிறேன்.

இந்த தீங்கிழைக்கும் நடத்தை டிஜிட்டல் துன்புறுத்தலின் விளைவாக எனக்கு கணிசமான உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். கண்டுபிடிக்க முடியாத கணக்குகளில் இருந்து மோசமான பாலியல் செய்திகளை அனுப்பினர். மேலும் ஆன்லைனில் என்னை குறிவைக்கின்றனர். நான் தற்கொலை செய்துகொள்ளும் பயங்கரமான மனநிலைக்கு என்னை கொண்டு செல்கின்றனர் என்று போஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+