மும்பை: பிளிப்கார்ட் என்ற ஈ-காமர்ஸ் தளத்தை உருவாக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த சச்சின் பன்சால், இந்தியாவின் முக்கியமான தொழில் முனைவோராக கருதப்படுகிறார்.
பிளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்ட இவர், நிதியியல் சேவை துறையில் நவி என்ற ஒரு ஸ்டார்ட் அப்பை நிறுவி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தன்னுடைய பணிகள் குறித்து மணி கண்ட்ரோல் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய நேரம் முழுவதையும் நவி நிறுவனத்தை மேம்படுத்துவதற்கே ஒதுக்குவதாகவும், ஒரு வாரத்தில் 80 முதல் 100 மணி நேரங்கள் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். வார நாட்கள் மட்டுமின்றி வார இறுதி நாட்களில் கூட தான் பணி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சச்சின் பன்சால் 2018ஆம் ஆண்டு நவி என்ற ஃபின்டெக் ஸ்டார்ட் அப்பை தொடங்கினார். அப்போது பெரும்பாலும் இதன் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரிந்தனர். ஆனால் அது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ள சச்சின் பன்சால் தன்னுடைய நிறுவனத்தில் வெறும் ரிமோட் பணிகளுக்கு ஒருபோதும் இடமில்லை எனக் கூறியுள்ளார். ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு என்றும் கூறியுள்ளார்.
தன்னுடைய இந்த நிலைப்பாட்டினை கண்டு பணியாளர்கள் தன்னை வெறுக்க கூடும் ஆனால் அலுவலகத்தில் இருந்து பணி புரிவதையே தான் விரும்புவதாகும் தெரிவித்துள்ளார். தாங்கள் தற்போது 100% அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.
தற்போது தான் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வதை கூட நிறுத்திவிட்டு தன்னுடைய முழு நேரத்தையும் நவி நிறுவனத்திற்காகவே ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார். இதனால் வார இறுதி நாட்களில் கூட தான் வேலை செய்வதாக கூறும் அவர், இதனால் ஊழியர்களும் குடும்பத்தினரும் என்னை வெறுக்கலாம் என கூறியுள்ளார். நான் இவ்வாறு வேலை செய்கிறேன் என்பதற்காக மற்றவர்களும் இதேபோல பணி செய்ய வேண்டும் நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
நவி என்பது 2018ஆம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் அங்குத் அகர்வால் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்ட நிதி சேவைகளை வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் டிஜிட்டல் கடன்கள், வீட்டுக் கடன்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், மருத்துவ காப்பீடு, டிஜிட்டல் தங்கம் மற்றும் மைக்ரோ கடன்களை வழங்கும் சேவைகளை செய்து வருகிறது இந்த நிறுவனத்தின் வருவாய் 100 மில்லியன் டாலர்கள் ஆகும், லாபம் 10 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications