நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் சேவையை விரிவாக்கம் செய்யும் முடிவில் ஷாப்பிங் சேவையைத் தாண்டி ஆன்லைன் சேவையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தற்போதைய திட்டத்தின் மூலம் நாட்டின் சில முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய போட்டியை சந்திக்க உள்ளது.
புதிய திட்டம்
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் இணைய வழியான பணப் பரிமாற்ற பிரிவில் மட்டுமே இருந்த பிளிப்கார்ட் நிறுவனம், ஆன்லைன் டிராவல் ஏஜென்சி துறை சார்ந்த வர்த்தகத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
டிராவல் ஏஜென்சி
இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் விமானம், ரயில், பஸ் மற்றும் ஹோட்டல் புக்கிங் சேவையில் இறங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை அளிக்க முடியும்.
இதுமட்டும் அல்லாமல் இப்புதிய முயற்சியின் வாயிலாகப் பிளிப்கார்ட்டின் வர்த்தகமும் உயரும்.
கூட்டணி
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் இத்திட்டத்தின் முதற்கட்டமாகச் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து இப்பிரிவு சார்ந்த வர்த்தகத்தைத் துவங்க உள்ளது.
தேடல்
மேலும் இப்பிரிவுக்குத் தலைவராக நியமிக்கத் திறன் வாய்ந்த அதிகாரியை பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி
பிளிப்கார்ட்டின் இந்த முயற்சியால் இத்துறையில் இருக்கும் மேக்மைடிரிப், யாத்ரா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகப் போட்டியை உருவாக்கும் நிலை ஏற்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications