சென்னை: தீவிரமடையும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதிலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் பல அதிரடியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது மத்திய அரசு.
இந்த நிலையில் மக்களுக்கான நிகழ்வு என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறையினருடன் கலந்துரையாடியுள்ளார்.
கடன் மறுத்தால் கூறுங்கள்
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு எந்த காரணமும் இன்றி வங்கிகள் கடன் கொடுக்க மறுதால் இது குறித்து புகார் அளிக்கலாம். இதற்கான சிறப்பு மையம் விரைவில் அமைக்கப்படும். இது தவிர இந்த புகார்கள் மெயில் மூலம் அனுப்பவும் வழி வகை செய்யப்படும். தொழில் துறையினர் புகார் அளிக்கும் போது அதன் நகலை வங்கி மேலாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தினை மேம்படுத்துவதில் கவனம்
மேலும் பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சொத்துகளை உருவாக்குவதிலும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், முதலீடு செய்வதிலும் தான் எங்கள் கவனம் உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் முந்தைய வங்கிகள் கடன் வழங்கலுக்கான தொலைபேசி வங்கி, மாமாக்கள் மற்றும் மைத்துனர்களையும் கடன் வழங்குவதை நாடின. இதன் வங்கிகளின் வாராக்கடன் தான் அதிகரித்தது.
வாரக்கடனை சரிசெய்ய நான்கு ஆண்டுகள்
இந்த நிலையில் இந்த வாராக்கடன்களை சரியாக அமைக்க எங்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன. இது போன்ற சூழ்நிலையை மீண்டும் எவ்வாறு தடுப்பது என்பது குறித்த பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் அரசாங்கம் பயனற்ற செலவினங்களை நாடவில்லை என்றும் கூறியுள்ளார்.
எல்ஐசி பங்கு விற்பனை
தமிழகம் மட்டும் அல்லாது, அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையானது உள்ளது. ஆக தவணைத் தொகைகள் விரைவில் வழங்கப்படும். மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதி உதவிகள் அதிகரிப்பட்டுள்ளன.மேலும் எல் ஐ சி பங்கு விற்பனை திட்டமிட்டுள்ளது. எனினும் எத்தனை சதவிகித பங்குகள் என்பது குறித்தான முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications