தற்போது ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய ஸ்விஷ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பத்தே நிமிடங்களில் அவர்களுக்கு பிடித்த உணவினை டெலிவரி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் உஜ்வால் சுகேஜா, பெரும்பாலானவர்கள் உணவு ஆர்டர் செய்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அதற்கு நேரடியாக கடைக்கு சென்று சாப்பிட்டு விடலாம் என்ற எண்ணம் கூட தோன்றுகிறது. இதனை போக்கும் வகையில் தான் நாங்கள் பத்து நிமிடங்களில் உணவு டெலிவரி என்ற புதிய கான்செப்ட்டை கொண்டு வந்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் தற்போது தங்களுடைய செயல்பாடு தொடங்கி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். இங்கே நாம் கடைக்கு சென்று உண்ணும் போது சில நிமிடங்களிலேயே நாம் ஆர்டர் செய்த தோசை கைக்கு வந்துவிடும் ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது நீண்ட நேரம் அதற்கு காத்திருக்க வேண்டி இருக்கிறது. இனி இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என சுகேஜா தெரிவிக்கிறார்.
10 நிமிடங்களில் உணவு டெலிவரி என்பது வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்று இருந்தாலும் சமூக வலைத்தளங்களின் இது பெரிய விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஏற்கனவே ஸெப்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்து விடுவோம் என விளம்பரம் செய்து தற்போது மக்களிடையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதே நடைமுறையானது உணவு டெலிவரிக்கும் பயன்படுத்தப்படுவது சரியாக வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மளிகை சாமான்கள், மற்ற பொருட்களை அப்படியே எடுத்து வந்து டெலிவரி செய்த விடலாம் ஆனால் உணவு அப்படி கிடையாது உணவு தயாரிப்பதற்கு என குறிப்பிட்ட நேரம் ஆகும் என்ற கேள்வியை சமூக வலைதள வாசிகள் முன்வைக்கின்றனர். சிலர் இப்படி ஆர்டர் செய்தவுடன் உணவு கிடைக்கிறது என்றால் அது பிரஷ்ஷாக தயார் செய்யப்பட்ட உணவு தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனக் கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட சில பயனாளர்கள் 10 நிமிட டெலிவரி என்றால் டெலிவரி வேலையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அது பெரிய அழுத்தத்தை உண்டாக்குகிறது. எனவே அவர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டியாக வேண்டும் அது மட்டும் இன்றி போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக் கொள்ளும் போது அது அவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.
டெலிவரி செய்யும் ஊழியர்களின் பார்வையில் பார்க்கும்போது இந்த பத்து நிமிட டெலிவரி என்ற கான்செப்ட் தவறானது என சில பயனாளர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்கின்றனர். இருந்தாலும் ஆர்டர் செய்த உடனே உணவு வந்துவிட்டது என்ற பதிவுகளையும் சமூகவலைதளங்களில் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications