அகமதாபாத்: இந்தியாவில் மக்களின் தேவையை அறிந்து தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்கள் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை அடைந்து விடுகின்றன. அதற்கு உதாரணமான ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம்.
2017 ஆம் ஆண்டு அகமதாபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் மால்டே மற்றும் அவரது மனைவி சார்மி மால்டே ஆகியோர் இணைந்து கவ்நீதி ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய நிறுவனம்தான் இது.

ஸ்ரீகாந்த் மற்றும் சார்மி ஆகிய இருவரும் ஐடி துறையில் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர். அங்கே இவர்களுக்கு நல்ல ஊதியம் ஊதியமும் கிடைத்தது இதனிடையே 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த்தின் தந்தை புற்றுநோயால் இறந்தார். அப்பொழுது தான் ஸ்ரீகாந்திற்கு நமது வாழ்க்கைமுறை மற்றும் நமது உணவு பழக்க வழக்கங்கள் குறித்து கவனம் திரும்பியது.
தன்னுடைய உணவு பழக்க வழக்க முறையை மாற்றியவர், முற்றிலும் இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே உண்ணத் தொடங்கினார். பின்னர் இதனையே ஏன் ஒரு தொழிலாக நாம் மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது . ஐடி வேலையை விடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி சார்மி இணைந்து 2017 ஆம் ஆண்டில் கவ்நீதி ஆர்கானிக் பிரைவேட் லிமிடெடை தொடங்கினர்.
உள்ளூரிலிருந்து விவசாயிகள் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் சென்று பயிற்சி பெற்ற இவர்கள் மாட்டுப் பண்ணை அமைத்து இயற்கையான தீவனம் கொடுத்து முதலில் நான்கு மாடுகளை வளர்த்தனர்.
பால் மற்றும் அதன் மூலம் உற்பத்தி செய்த நெய் ஆகியவற்றை முதல் கட்டமாக தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்கள் இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்ததை அடுத்து இதனை ஒரு பெரிய தொழிலாக மாற்றினர்.
இதன்படி தற்போது கவ்நீதி நிறுவனம் உயர்தரத்திலான பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பால் ,பன்னீர், நெய் ,நெய் பிஸ்கட் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படக்கூடிய ஊதுபத்தி உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்து வருகிறது.
"இதற்கு முன்பு தாங்கள் பார்த்த ஐடி வேலையைப் போல கிடையாது இது 365 நாளும் செய்ய வேண்டிய வேலை" என கூறுகிறார் ஸ்ரீகாந்த். தீபாவளியாக இருந்தாலும் சரி புத்தாண்டாக இருந்தாலும் சரி நாங்கள் தினமும் மாடுகளுக்கு தீவனம் வைக்க வேண்டும், பால் கறக்க வேண்டும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களது நிறுவனம் தற்போது 100 மாடுகளுடன் செயல்பட்டு வருவதாக கூறும் அவர் அமேசான் உள்ளிட்ட தளங்கள் வாயிலாகவும் தங்களது பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கிறார்.
2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 300 பேருக்கு வேலை வாய்ப்பும் தந்துள்ளது. தங்கள் பண்ணைகளில் வேலை செய்யக்கூடிய விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்காகவும் இவர்கள் நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications