இந்தியாவின் இரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (GJEPC), சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் போட்டித்தன்மையை அதிகரிக்க அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து GJEPC தலைவர் கிரீட் பன்சாலி சமீபத்தில் நடந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில், ஏற்றுமதி துறை பிரதிநிதிகளுடன் இணைந்து பல கொள்கைகளை முன் வைத்ததாகவும், இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மற்ற ஏற்றுமதி நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க மிக உதவிகரமாக இருக்கும் என்றும் கவுன்சிலின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச் சட்டம் மற்றும் நடைமுறைகளில் சீர்திருத்தம்
சுங்கச் சட்டம் 1962 ஐ நவீனமயமாக்க GJEPC அமைப்பானது கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுங்க நடைமுறைகளை வேகமானதாகவும் ,வெளிப்படையானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றும்.

இது இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும், இதன் மூலம் சர்வதேச அளவில் போட்டியிடவும் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக பெல்ஜியம், லண்டன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முன்னணி வர்த்தக மையங்களுடன் இந்தியா போட்டியிட வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி கடனில் சலுகை
அமெரிக்காவின் வரி விதிப்பை அடுத்து பல்வேறு துறைகளும் ஏற்றுமதி கடன் சலுகை குறித்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது நகைத்துறையும் ஏற்றுமதி கடன் வழங்கும் ஒரு சிறப்புத் திட்டத்தை கோரிக்கை வைத்துள்ளது.
இது பொதுவான ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமல்ல, குறிப்பாக இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கும் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். இந்திய நகைத் துறையை பொறுத்த வரையில் எம்.எஸ்.எம்.இ -க்களின் பங்கு மிக முக்கியமானது.
ஆக வட்டியில் மானியம் மற்றும் ஏற்றுமதி கடன் உத்தரவாத (ECGC) பிரீமிய மானியங்களை நீட்டிப்பது, பல்வேறு கொள்கைகள் சீர்திருத்தம் உள்ளிட்ட பலவும் எம்.எஸ்.எம்.இ-க்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
SEZ சட்ட திருத்தம் மற்றும் உள்ளூர் விற்பனை
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத் திருத்தத்தை (SEZ), விரைவாக அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த திருத்தம் மூலம் சரியான வரி கட்டண சரிசெய்தலுடன் வரையறுக்கப்பட்ட உள்நாட்டு விற்பனைக்கு வழிவகுக்கும். அதாவது SEZ-களுக்கு ஏற்றுமதி மட்டுமே பிரதானமாக இருக்கும் போது, சந்தையில் தேக்க நிலை ஏற்படும் விடுமுறைக் காலங்களில் அல்லது சர்வதேச ஆர்டர்கள் குறையும்போது, SEZ அலகுகளில் உள்ள இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் சும்மா கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் சட்டத் திருத்தம் செய்வதன் மூலம், சும்மா இருக்கும் உற்பத்தித் திறனை உள்ளூர் சந்தைக்குப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த GJEPC கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய இரத்தினங்கள் மற்றும் நகை பூங்கா கொள்கை
நகைத்துறையில் உற்பத்தி சூழலை மேம்படுத்தவும், இந்தியாவின் இரத்தினங்கள் மற்றும் நகைகள் துறையில், சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் உதவும் வகையில், தேசிய இரத்தினங்கள் மற்றும் நகைப் பூங்கா கொள்கையை உருவாக்க வேண்டும். இது இத்துறையின் எதிர்கால வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்த உதவிகரமாக இருக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறை எளிதாக்குதல்
சர்வதேச அளவில் இந்திய ஏற்றுமதியாளர்கள் சர்வதேச வர்த்தகர்களுக்கு இணையாக போட்டியிட, இரத்தினங்கள் மற்றும் நகைத்துறைக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கைகளை எளிதாக்குமாறு நிதி அமைச்சகத்தை GJEPC அமைப்பானது வலியுறுத்தியுள்ளது. இது கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதியை எளிதாக்க உதவிகரமாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications