ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு.. மத்திய அரசின் புதிய திட்டம்..

இந்தியாவில் பல வர்த்தக வாய்ப்புகள் இருந்தாலும் திறன் தட்டுப்பாடு தொடர்ந்து சந்தையில் நிலவி வருவதை யாராலும் மறுக்கமுடியாது. சொல்லப்போனால் இது நாட்டின் வளர்ச்சியைக் குறைக்கும் முக்கியக் காரணி.

இந்நிலையில் மத்திய அரசு, தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாகப் புதிய நிதி திட்டத்தை வடிவமைத்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயிற்சிக்காக நிறுவனங்கள் செலவிடும் தொகையை மத்திய அரசே ஏற்கும் வகையில் உள்ளது இப்புதிய திட்டம்..

36 சதவீத நிறுவனங்கள்

36 சதவீத நிறுவனங்கள்

இந்தியாவில் தற்போது வெறும் 36 நிறுவனங்கள் மட்டுமே இன்-ஹவுஸ் அதாவது, தங்கள் நிறுவனத்திற்கான திறன் தேவையை ஊழியர்களுக்குத் தன் நிறுவனத்திலேயே பயிற்சி அளித்து வருகிறது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

இந்த அளவீடு ஜெர்மினியில் 86%, சீனாவில் 85%, ரஷ்யாவில் 52%, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் 51% என்ற அளவில் உள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா இதில் மிகவும் பின்தங்கிய நிலையில் மட்டுமே உள்ளது.

வேகமாக வளரும் இந்தியாவிற்கு இது மிகவும் மோசமான நிலை. இதனை மாற்றவே மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

புதிய திட்டத்தின் நோக்கம்..

புதிய திட்டத்தின் நோக்கம்..

இந்தியாவில் தற்போது இருக்கும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் போதிய திறன் வாய்ந்த ஊழியர்களை உருவாக்கத் தவறியுள்ளது. இதனை வரைவாகவும் சரியான முறையில் உருவாக்கவும் மத்திய அரசு தற்போது RIC திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

RIC திட்டம்

RIC திட்டம்

இப்புதிய திட்டம் குறித்து மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சர் கூறுகையில், 62 நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Reimbursable Industry Contribution எனப்படும் ஆர்ஐசி திட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிதியும் நிறுவனங்களும்

நிதியும் நிறுவனங்களும்

ஒவ்வொரு நிறுவனத்தின் மீது தனியாக வரி அல்லது தற்போது நிறுவனங்களால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR)-க்கு செலவிடும் தொகையைத் திறன் மேம்பாட்டு நிதிக்கு மாற்றப்படும்.

இதன் மூலம் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியிக்கு மத்திய அரசே நிதியுதவியை அளிக்கும் (reimbursement) இதுவே RIC திட்டம் என இத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

செலவு

செலவு

இந்தத் திட்டத்தின் மூலம் நிறுவனம் ஊழியர்களுக்குத் தொழில் கல்லி மற்றும் பயிற்சியை அளிக்கலாம். இல்லையெனில் இதனை அளிக்கப் பிற நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு இத்திட்டம்..?

யாருக்கு இத்திட்டம்..?

RIC திட்டம் குறித்து விபரங்களை அளிக்க அமைச்சர் இத்திட்டம் குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் கொண்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சிறு தொழில் நிறுவனம்

சிறு தொழில் நிறுவனம்

இந்தியாவில் ஸ்சார்ட் அப் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வரும் நிலையில், இத்திட்டம் இவர்களுக்கு அதிகளவில் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2022

2022

இது பிரதமரின் வேலைவாய்ப்பு இலக்குத் திட்டத்தில் புதிய உந்து சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி 2022ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 50 கோடி திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+