MSME சிறப்பு கடன் திட்டத்தில் தடுமாறும் அரசு வங்கிகள்! தனியார் வங்கிகள் ஆட்டத்திலேயே இல்லை!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு கடந்த மார்ச் இறுதி வாரத்தில் லாக் டவுன் அறிவித்தது. இந்த லாக் டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ சிறு குறு தொழில்முனைவோர்களும், அவர்களிடம் வேலை பார்க்கும் வெகு ஜன மக்களும் தான்.

MSME சிறப்பு கடன் திட்டத்தில் தடுமாறும் அரசு வங்கிகள்! தனியார் வங்கிகள் ஆட்டத்திலேயே இல்லை!

சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு, கடந்த சில மாதங்களாக வியாபாரம் நடக்காததால், கையில் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, இந்த தொழில் துறைகியினரின் பணப் பிரச்சனைகளைத் தீர்க்க, கடந்த மாதத்தில், மத்திய அரசு அறிவித்த, Guaranteed Emergency Credit Line திட்டத்தை, ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ் தொழில் துறையினருக்கு குறிப்பாக MSME-யினருக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை, வங்கிகள் பிணை இல்லாமல் கடன் கொடுக்கலாம். அதே போல கொடுக்கும் கடனுக்கு மற்றொரு அரசு நிறுவனம் கேரண்டி கொடுக்கும்.

ஆனால் இப்போது வரை இந்த கடன் திட்டம் வேகம் எடுக்கவில்லை. சந்தையில் டிமாண்ட் இல்லாததால், வங்கிகளும் கூடுதலாக கடன் தொகையை வழங்க முடியவில்லை. அதோடு வங்கிகளுக்கு, இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் கடன்கள் மோசமான கடன்கள் (செயல்படாத கடன்கள்) ஆகிவிடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது.

அரசு வங்கிகள் கூடுதலான கடன் தொகைகளை கொடுக்க அனுமதித்து இருக்கிறார்கள். ஆனால் அதில் பாதி தொகை தான் பணம் (Disburse) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 16 ஜூன் 2020 வரை அரசு வங்கிகள், 36,486 கோடி ரூபாய் பணம் கொடுக்க அனுமதித்து இருக்கிறது வங்கி. ஆனால் 18,306 கோடி ரூபாய் தான் டிஸ்பர்ஸ் செய்து இருக்கிறது.

எந்த வங்கி எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்..?
16 ஜூன் 2020 வரை எஸ்பிஐ 15,317 கோடி ரூபாய் அனுமதித்து 9,489 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்கள்.
பேங்க் ஆஃப் பரோடா 4,560 கோடி ரூபாய் அனுமதித்து 1,255 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்கள்.
கனரா 3,683 கோடி ரூபாய் அனுமதித்து 1,619 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்கள்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் 3,371 கோடிக்கு அனுமதித்து 1,187 கோடி ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள்.

தனியார் வங்கிகள் இந்த Guaranteed Emergency Credit Line திட்டத்தில் அத்தனை ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+