இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் பங்கு வகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கொரோனாவினால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இவை மட்டும் அல்ல கிட்டதட்ட கடந்த மூன்று மாதங்களாகவே இந்திய தொழில் துறையானது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அரசும் பல்வேறு சலுகையினை அளித்து வருகிறது.

தற்போது படிப்படியாக லாக்டவுனிலும் தளர்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட நிறுவனங்கள் பிரச்சனைகளில் இருந்து இயல்பு நிலைக்கு வர முடியாமலே உள்ளன. அதிலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல போதிய நிதி இல்லாமல் மீண்டும் வர்த்தகத்தினை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றன.
அப்படியும் போதிய நிதி இருந்தால், சரியான மூலதன பொருட்கள் கிடைப்பதில்லை. அதுவும் தற்போது அதிக விலையுள்ள மூலதன பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி எது எடுத்தாலும், ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு மத்தியில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எப்போது தான் மீண்டு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசும் பல்வேறு சலுகைகளை இந்த MSME க்களுக்கு அளித்து வரும் நிலையில், இந்த ஜூன் 20 முதல் ஜூன் 27 வரையில் MSMEக்கள் வாரமாக கொண்டாடாப்படுகிறது.
இந்த நிலையில் எம்எஸ்எம்இக்கள் வாரத்தில் இரண்டாவது நாளான இன்று, DUN & bradstreet indiaவின் மூத்த பொருளாதார நிபுணர் அருண் சிங் அவர்களின் விரைவான மீட்சிக்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் யுவர் ஸ்டோரி தளத்தில் விவாதித்துள்ளார்.
தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல்
மன நிலையை மாற்றுவ்கது மற்றும் புதிய வணிக கண்டுப்பிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் உற்பத்தி திறனை தினசரி அடிப்படையில் கண்கானிக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் உங்கள் வணிகத்தின் வருவாயை புதுப்பிக்கக் கூடிய உத்திகளை பற்றி சிந்திக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் ஈ-காமர்ஸ் தளம் அமைத்தல்
குறிப்பாக மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தவும, ஒன்று குறுகிய கால இடையூறுகளை நிர்வகித்தல், இரண்டாவது நடுத்தர கால தேவைகளை பூர்த்தி செய்தல். மூன்றாவது நீண்ட கால மாற்றங்களுக்கான திட்டமிடல்.
சரியான உள்ளூர் விநியோக சங்கிலியை உருவாக்குதல், அந்த விநியோக சங்கிலியை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். முக்கியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். அதனை வலுப்படுத்துங்கள் என்றும் அருண் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications