சென்னை: மாத சம்பளக்காரர்கள் அனைவருக்கும் சுயதொழில் அல்லது கூடுதல் வருமானம் பெற வேண்டும் என்ற எண்ணம் இன்றைய தலைமுறையினர் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது. அதிலும் பெரும்பாலானோர், தான் பணியாற்றும் துறையில் இருந்து மாறுப்பட்ட துறையில் இந்த கூடுதல் வருமானத்தை எதிர்பார்பது என்பதை சற்று கவனிக்ககூடிய ஒன்றாக உள்ளது.
இப்படிப்பட்டவர்களுக்காவே ஜிடேஷ் ஒரு வழியை கூறியுள்ளார். அதுவும் வெறும் 70,000 ரூபாய் முதலீட்டு உடன்.
செல்ப் டிரைவிங்
இந்தியாவின் பெரு நகரங்களில் தற்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை செல்ப் டிரைவிங் முறையில் வாடகைக்கு விடும் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் எளிமையான வழிமுறைகள் மற்றும் உறுதியான வருமானம் ஆகியவேற்றே.
வாய்ப்பு
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி எப்படி வருமானம் பெறுவது என்பதையே ஜிடேஷ் தனது குவாரா தள பதிவில் தெரிவித்துள்ளார்.
செல்ப் டிரைவிங் கட்டண முறை
இந்தியாவில் பல செல்ப் டிரைவிங் நிறுவனங்கள் இருக்கும் நிலையில், இவர் drivezy தளத்தில் தனது வாகனத்தை இணைத்துள்ளார். சந்தையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டும் தொகையில் 25 சதவீதம் பிளாட்பார்ம் கட்டணமாகவும், 75 சதவீத தொகையை வண்டியின் உரிமையாளருக்கான தொகையாக வழங்குகிறது. இதுவே drivezy நிறுவனத்தின் முறை, பிற நிறுவனங்களில் இதன் அளவீடு சற்று மாறுபடலாம்.
முதலீடு
மாத சம்பள காரர்களுக்கு இன்று 70,000 ரூபாய் என்பது சிலருக்கு பெரிய தொகையாக இருந்தாலும் எளிமையாக திரட்டகூடிய ஒரு தொகையே. இதுப்போலவே ஜிட்டேஷ் வெறும் 70,000 முதலீட்டில் மாதம் 3,500 ரூபாய் சம்பாதிக்கிறார்.
இவரது அனுபவத்தையை நாம் இப்போது பார்க்கப்
துவக்கம்
ஜிட்டேஷ் துவக்க முதலீடாக 65,000 ரூபாய்க்கு ஹோண்டா ஆக்டிவா வண்டியை கமர்ஷியல் செல்ப் டிரைவிங் உரிமத்துடன் பெற்று drivezy நிறுவனத்தில் இணைத்துள்ளார்.
வருமானம்
இதன் மூலம் மாதம் இவருக்கு 3,500 ரூபாய் வருமானம் பெறுகிறார். இது சிறிய தொகையாக இருந்தலும் நீண்ட கால முதலீடு நோக்கில் சந்தையில் கிடைக்கும் வருமானத்தை விடவும் மிகவும் அதிகம்.
இதில் 3,500 ரூபாயும் லாபமில்லை, சில செலவுகளும் இதில் உண்டு.
செலவுகள்
டிராக்கிங் டிவைஸ் வாடகை- 200 ரூபாய்/மாதம்
வாகன பழுது பார்க்கும் கட்டணம்- 500 ரூபாய்/மாதம்
சராசரியாக இன்சூரன்ஸ் கட்டணம் - 300 ரூபாய்/மாதம்
மொத்த செலவுகள் - 1,200 ரூபாய்/மாதம்
36 மாதம் கணக்கீடு
மாதம் 3,500 ரூபாயில் செலவுகள் அனைத்தும் போக சராசரியாக 2,500 ரூபாய் வைத்துக்கொள்ளலாம்
இதே பணியை 3 வருடம் அதாவது 36 மாதம் தொடர்ந்து செய்தால், 3 வருட முடிவில் நமக்கு கிடைப்பது 2500 X 36 = 90,000 ரூபாய்
3 வருடத்திற்கு பிறகு சந்தையில் ஹோண்டா ஆக்டிவா வாகனத்தின் விலை 19,000 ரூபாய்
ஆக 3வருடங்களுக்கு பின் கிடைக்கும் மொத்த தொகை 1,09,000 ரூபாய். இத்தொகைக்கு வருடாந்திர வட்டியை கணக்கிட்டால் 18.3 சதவீதம்.
பிற திட்டங்கள்
இந்த 18 சதவீத வட்டி வருமானம் வங்கி வைப்பு நிதி, எஸ்ஐபி நிதி மற்றும் சந்தையில் இருக்கும் பிற முன்னணி முதலீட்டு திட்டங்களை விடவும் அதிகமாகும்.
முதலீடு செய்யும் முன் இத்திட்டத்தில் இருக்கும் சாதகபாதகங்களை அனைத்தும் முழுமையாக தெரிந்துக்கொண்ட பின் முதலீடு செய்யவும்.
புதிய திட்டம்
70,000 ரூபாய் தொகையை திரட்ட முடியாதவர்களுக்கு drivezy புதிதாக துவங்கியுள்ள சைக்கிள் வாடகை திட்டம் பயன்படும் என ஜிட்டேஷ் தெரிவித்துள்ளார்.
புதிய ஃபார்முலா..!
யூடியூப் தமிழர்கள்..!
பிக்ஸட் டெபாசிட்
ஜாக்பாட்

More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications