MSME.. ஜிடிபி வீழ்ச்சியால் சிறு வணிகங்களும் சற்று அழுத்தத்தினை காணலாம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டில் 2020 -21-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்படும். இந்த வீழ்ச்சியால், கார்ப்பரேட் இந்தியாவின் வளர்ச்சியில் 15 சதவீதம் வரை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

 

இதனால் சிறு வணிகங்களும் பெரும் அளவு பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
MSME.. ஜிடிபி வீழ்ச்சியால் சிறு வணிகங்களும் சற்று அழுத்தத்தினை காணலாம்.. !

எவ்வாறாயினும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கொள்கை தலையீடுகள் சிறிய நம்பிக்கையை அளிக்கின்றன. எனினும் அவர்களால் தேவையை புதுபிக்க முடியாது. இது சிறு வணிகங்களுக்கு முக்கியமானது என்று அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை 21 சதவீதம் வரை வருவாயில் கூர்மையான சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம் இயக்க லாப அளவு 4 - 5 சதவீதமாகக் குறையும் என்று உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான கிரிசிலின் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தால் பொருளாதாரத்தில் 5 சதவீத வீழ்ச்சியினை எதிர்பார்க்கிறது. இது நாடு முழுவதும் கிட்டதட்ட மூன்று மாதங்கள் பூட்டப்படுவதற்கு வழிவகுத்தது. எனினும் தற்போது சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரிவுக்கு, 3 டிரில்லியன் ரூபாய் வரை பிணை இல்லாத கடன்கள் வரை ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் ஏற்கனவே அறிவித்துள்ளன.

கொரோனாவால் எம்எஸ்எம்இ-க்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. இதனால் அவற்றின் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடன் தகுதியும் பாதிக்கலாம். மேலும் இது மூலதன பணப்புழக்கத்தினை மோசமாக்கும் என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

எம்எஸ்எம்இ -க்கள் குறைந்த மூதலன பொருட்கள் விலையில் இருந்து, லாபம் ஈட்டப்பட வேண்டும் என்று அது கூறியது. ஆனால் பொருளாதாரத்தில் பலவீனமான தேவை, சிறு வணிகப் பிரிவில் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று அது கூறியுள்ளது.

இது ஒட்டு மொத்த எம்எஸ்எம்இ கடனில் 32 சதவீதத்தினைக் கொண்டிருக்கும், மைக்ரோ எண்டர்பிரைசஸ் பிரிவே மிகக் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் வருவாய் வளர்ச்சி மற்றும் இயக்க லாப அளவு மற்றும் செயல்பாட்டு மூலதன நீட்டிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவை பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் எம்எஸ்எம்இ துறையானது பெரும் அழுத்ததினை காணலாம் என்றும் கூறப்படுகிறது..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s GDP contraction poses threat to MSMEs

India’s GDP may contract 5 percent in FY2021, its may lead to a 15 percent fall in corporate india’s revenue and threat to MSMEs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X