ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டம்..?!

கொரோனா பாதிப்பின் காரணமாகக் கடந்த 40 நாட்களாக இந்திய வர்த்தகச் சந்தை கிட்டத்தட்ட 90 சதவீதம் முடங்கியுள்ள நிலையில், சிறு குறு நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் சிறு குறு நிறுவனங்களை இந்த லாக்டவுன் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க மத்திய அரசு முக்கியமான திட்டம் ஒன்றை தீட்டி வருகிறது.

இத்திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்தி திட்டம் குறித்துத் தகவல் அறிந்த மூத்த அதிகாரிகள் முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

ரூ.3 லட்சம் கோடி

ரூ.3 லட்சம் கோடி

ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்திய பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருக்கும் சிறு வர்த்தகங்களுக்குப் பிரத்தியேகமாக 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய ஆலோசனை செய்து வருவதாக இத்திட்டம் குறித்த அறிந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 சதவீதம் அதிகக் கடன்

20 சதவீதம் அதிகக் கடன்

மத்திய அரசு தற்போது ஆலோசனை செய்து வரும் தீட்டத்தின் மூலம் சிறு நிறுவனங்கள் தங்களது மொத்த கடன் அளவீட்டை விடவும் சுமார் 20 சதவீதம் அதிகத் தொகையைக் கடனாகப் பெறலாம். மேலும் இந்தக் கூடுதல் கடன் முழுமையாகப் பிரதமர் மோடி நிர்வாகத்தின் கட்டுப்பாடில் இயங்க உள்ளது.

இத்திட்டத்தில் யாரேனும் நஷ்டம் அல்லது திவால் ஆகும் நிலையை அதைச் சமாளிக்க இப்போதே சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு அதனை ஈடு செய்யவும் மோடி அரசு ஆலோசனை செய்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

புதுப் புதுத் திட்டங்கள்

புதுப் புதுத் திட்டங்கள்

கொரோனா காரணத்தினால் ஏற்பட்ட லாக்டவுன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தி முடங்கியது மட்டும் அல்லாமல் மக்களின் நுக்ரவின் அளவு நினைத்து கூடப் பார்க்க முடியாத நிலையில் குறைந்துள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய லாக்டவுனில் இருந்து மீண்டு வர இந்திய அரசு, வர்த்தகக் கட்டுப்பாட்டு அமைப்புகளைத் தாண்டி முதலீட்டு அமைப்புகள், தனியார் சந்தை ஆய்வு நிறுவனங்கள் எனப் பல தரப்பு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நுகர்வை குறைந்த காலக்கட்டத்தில் மீட்டு எடுக்கப் பல புதிய திட்டங்களை முன்வைத்து வருகின்றனர்.

 

மோடி அரசு

மோடி அரசு

தற்போது இருக்கும் சூழ்நிலையில் மோடி அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் வங்கியின் வாயிலாகவே நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்து வழிகளைக் கண்டு வருகிறது. இதன் வாயிலாகவே தற்போது சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க வங்கி வாயிலாகக் கூடுதல் கடன் கொடுத்து வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+