இந்திய ஸ்டார்ட்அப் துறை வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீட்டை வருடத்தின் 365 நாளும் ஈர்க்கும் முக்கிய துறையாக இருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்திய ஸ்டார்ட்அப் துறை யாரும் பார்க்காத மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளது. அடுத்த சில வருடங்களுக்கு நிறுவனத்தை நடத்தினால் போதுமானது என்ற நிலைக்கு பல சிஇஓக்கள், நிறுவனர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்தியா ஸ்டார்ட்அப் துறையில் பல ஆயிரம் புதிய மற்றும் வெற்றிகரமான நிறுவனங்கள் இருந்தாலும், முதல் கட்ட வெற்றியை சுவைத்த பின்பு அதிகளவிலான தடுமாற்றத்தையும் வீழ்ச்சியை எதிர்கொண்ட நிறுவனங்களும் உள்ளது.

இந்த முக்கியமான நிலையில் டெக் துறையில் தனது மனைவியிடம் கடன் வாங்கி துவங்கிய ஸ்டார்ட்அப்-ஐ இன்று இன்போசிஸ் என மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உருவாக்கியுள்ள இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
இன்றைய ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் அனைவரும் இளம் தலைமுறையினர், அனைத்து தரப்பினரையும் ஈர்க்க கூடியவர்கள், இதேவேளையில் அதிகப்படியான தவறுகளையும் செய்ய கூடியவர்கள் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆதனால் அவர்கள் மீது யாரும், எந்த தரப்பினரும் கடிந்துக்கொள்ள கூடாது.
இதேவேளையில் தவறுகளை உணர்ந்து அவர்களை திருத்திக்கொண்டு வேகமாக அவர்களின் இலக்கை நோக்கியும், வளர்ச்சி பாதைக்கு திரும்ப வேண்டும். இதேபோல் நிறுவனத்தில் அனைத்து தரப்பினருக்கும், வர்த்தகத்திற்கும் எதுவாக முடிவு எடுக்கும் வகையில் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டாலே போதுமானது.
இதேபோல் முதலீட்டாளர்களிடம் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், நாங்கள் உங்கள் பணத்தை இழந்துவிட்டோம், இதன் பின்பு சரியான முறையில் வர்த்தகத்தை இயக்குகிறோம் என்று வெளிப்படையாக கூற வேண்டும். இதேபோல் பங்குகளை வைத்துள்ள ஊழியர்களும், நிறுவனர்களும் 10 மடங்கு உழைத்து இழப்பை ஈடு செய்யும் பக்குவத்தை கொண்டு வர வேண்டும் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதை நீங்க எப்படி பார்க்குறீங்க..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications