இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா வர்த்தக ஆதிக்கத்தை அடைய உபர் நிறுவனத்திற்கு எதிராகப் பல்வேறு சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் உபர் தற்போது இந்தியாவைத் தவிர ஆசிய சந்தை வர்த்தகத்தில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் இந்திய வர்த்தகத்தை ஓலா வாங்க முயற்சி செய்து வருகிறது.
ஏப்ரல் 1
ஒவ்வொரு ஆண்டும் ஓலா நிறுவனம் ஏப்ரல் 1 முட்டாள் தினத்தில் ஏதேனும் விநோதமான திட்டத்தையும், முடிவையும் அறிவித்து மக்களை ஜாலியாக ஏமாற்றுவது வழக்கமாக வைத்துள்ளது
இந்த வருடம்
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வருடத்திற்கான முட்டாள்கள் தின வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஓலா நியூஸ் நெட்வொர்க்
இந்த வீடியோவில் ஓலா நிறுவனம் புதிதாக ஒரு ஊடக நிறுவனத்தைத் துவங்க உள்ளதாக அறிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளது. ஓலா நியூஸ் நெட்வொர்க் தினசரி செய்திகள் தனது ஓலா கேப்களில் நேரலையாகப் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முன் அறிவிப்பு
இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் அறிவித்த போதே மக்கள் இது ஏப்.1க்கான திட்டம் எனக் கணித்ததால் இந்த முறை ஓலாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
வீடியோ
டிவிட்டரில் ஓலா வெளியிட்ட வீடியோ.
உண்மையை உடைத்தது..
கடைசியில் இது பொய் என ஒப்புக்கொண்டது ஓலா.


Click it and Unblock the Notifications