இந்திய உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக இருக்கும் MSME நிறுவனங்கள் கொரோனா தொற்றால் மோசமான நிலையில் இருக்கிறது. ஆனால் இந்த நிலை பெரிய அளவில் மாறுவது மட்டும் அல்லாமல் விரைவில் MSME இந்திய வர்த்தகச் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச MSME தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
எதற்காக இந்த MSME தினம்..?
MSME பிரிவில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வர்த்தக இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகவும், இன்னோவேஷன் & கிரியேடிவிட்டி அதிகரிக்க வேண்டும் என்றும், உலகளவில் MSME நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சர்வதேச MSME தினம் கொண்டாடப்படுகிறது.
MSME நிறுவனங்கள்
இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து நாடுகளிலும் MSME நிறுவனங்கள் பெரிதும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக 2020 கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் மூலம் இந்தியாவில் இருக்கும் MSME நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், மத்திய அரசு பெரிய அளவிலான கடன் திட்டத்தை அறிவித்தது.
75,000 கோடி ரூபாய் கடன் திட்டம்
மத்திய அரசின் ஒப்புதலுடன் 2020ல் MSME நிறுவனங்களைப் பாதிப்பில் இருந்து மீட்டு எடுப்பதற்காகச் சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிலான கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வேகமாக ஒப்புதல், விரைவான பணப் பட்டுவாடா எனப் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.
MSME ஆதிக்கம்
சர்வதேச சிறு வர்த்தக அமைப்பின் தரவுகள் அடிப்படையில் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 70 சதவீத வேலைவாய்ப்பும், 50 சதவீத ஜிடிபி-யும் MSME நிறுவனங்கள் வாயிலாகத் தான் வருகிறது. ஒருபக்கம் MSME சிறுமையாகப் பார்க்கப்பட்டாலும் நாட்டின் பெரும் பகுதி வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை MSME நிறுவனங்கள் தான் உருவாக்குகிறது.
MSME வரலாறு
MSME நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து 74வது ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில், ஜூன் 27ஆம் தேதி சர்வதேச MSME தினம் ஆக (International MSMEs Day) கொண்டாட அறிவித்தது. இதன் மூலம் கடந்த 5 வருடங்களாகச் சர்வதேச MSME தினம் (International MSMEs Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
250 ஊழியர்கள்
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் கிட்டதட்ட 250 ஊழியர்களுக்குக் குறைவாக இருக்கும் நிறுவனங்களை MSME பிரிவில் சேர்க்கப்படுகிறது. இந்த MSME பிரிவுக்குள்ள வருமானம், ஊழியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications