கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி நவீன முறையில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர். கேரளாவை சேர்ந்த ஆடம் சாம்சுதீன் மற்றும் அவரது மனைவி ரீசா மானல் ஆகிய இருவரும் இணைந்து 2022 ஆம் ஆண்டு குரோ தி ஃபங்கி (Grow The Funguy) என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட் அப்பை தொடங்கினர்.
ஆடம் சாம்சுதீன் குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவில் வசித்து வந்தார். திடீரென அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்படவே அவரது குடும்பம் மீண்டும் கேரளாவுக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. கேரளாவுக்கு திரும்பிய பிறகு இவர்களது குடும்பம் சத்தான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அப்படி அவர்கள் உணவில் காளான்களை அடிக்கடி சேர்த்து கொண்டனர். இது தான் குரோ தி ஃபங்கி நிறுவனம் தொடங்குவதற்கான அடித்தளம்.

ஆடம் சாம்சுதீன் தனது மனைவியுடன் இணைந்து 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் 2022 ஆம் ஆண்டு குரோ தி ஃபங்கி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் காளான் வளர்ப்புக்கு தேவையான அனைத்து தீர்வுகளையும் வழங்கக்கூடிய நிறுவனமாக இருக்கிறது. இவர்கள் காளான் வளர்ப்புக்கு தேவையான ஒரு தொகுப்பினை விற்பனை செய்கின்றனர். அதனை மக்கள் வாங்கி அவர்கள் வீடுகளிலேயே காளான் வளர்ப்பில் ஈடுபட முடியும்.
முதலில் இவர்கள் தங்களுடைய வீட்டிலேயே சின்னதாக ஒரு அறையினை அமைத்து காளான் வளர்ப்பில் ஈடுபட்டு பரிசோதனை செய்தனர். அப்படி பரிசோதனை செய்யும் போது இவர்களுக்கு உருவான ஐடியா தான் மஷ்பெல்லட்டுகள் (Mushpellets). இதனை பயன்படுத்தினால் போதும் இயற்கையான சத்தான காளான் வளர்ந்துவிடும்.
இது காளான் வளர்ப்புக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக இருக்கிறது. எனவே மஷ்பெல்லட்டுகளுக்கு கேரளா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவிலேயே இப்படி ஒரு தயாரிப்பை வழங்க கூடிய ஒரே நிறுவனம் குரோ தி ஃபங்கை என்ற பெயரும் இவர்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்த தம்பதி க்ரோ ரூம் என்ற பெயரில் ஒரு புதிய காளான் வளர்ப்பு முறையை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி கண்டெய்னர்களில் காளான் வளர்ப்பில் ஈடுபடுவது, அதனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் ஃபோன்கள் வழியாக கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கூடிய விரைவில் இது வெற்றி அடையும் என இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இது பயன்பாட்டுக்கு வரும் போது காளான் வளர்ப்பில் பெரிய மாற்றம் வரும் என கூறுகின்றனர்.
இவர்களது மஷ்பெல்லட்டுகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 டன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இவர்களிடமிருந்து சுமார் 500 விவசாயிகள் தொடர்ச்சியாக மஷ்பெல்லெட்டுகளை வாங்கி ஓராண்டில் சுமார் ஐந்து கோடி காளான்களை வளர்த்து இருக்கிறார்கள். கேரளா மட்டும் இன்றி பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் என இவர்களது வாடிக்கையாளர்கள் விரிவடைந்துள்ளனர்.
தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாயாக தான் இருந்தது. அதுவே 2024 ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது நடப்பாண்டில் தங்களது நிறுவனத்தின் வருமானத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்த தம்பதியினர் செயல்பட்டு வருகின்றனர் இவர்களுக்கு கேரள அரசின் ஸ்டார்ட் திட்டம் மூலம் நிதி உதவியும் கிடைத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications