வீணாகத் தூக்கி எறியப்படும் தேங்காய் சிரட்டைகள் மூலம் கைவினைப் பொருட்களைத் தயாரித்து மாதம் 7 முதல் 8 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் தொழிலதிபரான மரியா குரியகோஸ் என்பவர்.
திருச்சூரைப் பூர்விகமாக கொண்ட மரியா, மும்பையில் இளங்கலை பட்டமும், ஸ்பெயினில் முதுகலை பட்டமும் பெற்றவர்.பட்டப்படிப்பை முடித்தவுடன் மும்பையில் உள்ள கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சிறுவயது முதலே மரியா அவர்களுக்கு தொழில் தொடங்கும் ஆசை ஏற்பட்டுள்ளது, ஆனால் அது எந்தத் தொழில் என்பதில் அவருக்கு அப்போது ஐடியா இல்லை. சொந்த ஊரில் மரியா இருந்தபொழுது அங்கு தேங்காய் சிரட்டைகள் அதிக அளவு குப்பையில் வீசப்படுவதை கண்டுள்ளார்.
பிஸ்னஸ் ஐடியா
ஆனால் அது மேற்கத்திய நாடுகள் பல வகைகளில் பயன்படுத்து வருவதையும் நன்கு அறிந்தவர் என்பதால், இந்தியாவில் அதை வெறும் அடுப்பு எரிக்க கரியாக மட்டுமே பயன்படுத்துவதை அறிந்துள்ளார். அதன்பின் தேங்காய் சிரட்டைகளை வைத்து கைவினைப் பொருட்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதன்பின் சிரட்டைகளில் கிண்ணங்கள் உட்பட அழகிய பொருட்களை தயாரித்து, சந்தையில் அதற்கான இடத்தையும் ஏற்படுத்தி 'தேங்கா' 'Thenga' என்ற பிராண்ட்டை உருவாக்கியுள்ளார்.
ஆரம்பம் அவ்வளவு எளிதல்ல!
2019 ஆம் ஆண்டு தேங்காய் சிரட்டைகள் கொண்டு மக்களுக்கு உதவும் வகையில் கைவினைப் பொருட்களை தயாரிக்க நினைத்த மரியா, அது தொடர்பான கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களை சந்தித்து நுணுக்கங்களை கற்றுள்ளார்.
இது புதிய தொழில் என்பதால் சரியாக போகுமா என்பது தெரியாததால், ஆரம்பத்தில் தானே சில கைவினைப் பொருட்களை தயாரித்தாக மரியா கூறியுள்ளார்.
முதல் ஆர்டர்!
தொடக்கத்தில், சில தயாரிப்புகளை சாம்பிள்காக ஈகோ ப்ரெண்ட்லி தயாரிப்புகளை விற்கும் கடைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன், 100 கிண்ணங்களுக்கான ஆர்டரும் கிடைத்ததுள்ளது. அந்த முதல் ஆர்டரை அவரின் பெற்றோர்கள் உதவியுடன் செய்து முடித்துள்ளார்.
அதன்பின் அவரின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, ஆர்டர்களும் குவியத் தொடங்கியவுடன் 12 பணியாட்களை வைத்து இன்று ஆண்டுக்கு 8000 சிரட்டை தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார்.
தயாரிப்பில் உள்ள சிரமங்கள்!
தேங்காய் சிரட்டைகள் பொதுவாக சரியான அளவில் கிடைக்காது, அதனால் அவர்கள் சரியான சிரட்டைகளை தேர்வு செய்ய பல மூட்டைகளை வாங்கி அதிலிருந்து தேவையான சிரட்டைகளையே தேர்வு செய்ய முடியும் எனவும், அதன் மூலமாக தான் சரியான கைவினைப் பொருட்களை தயாரித்து கொடுக்க முடியும் எனவும் மரியா தெரிவித்துள்ளார்.
மேலும் சிரட்டைகள் குறிப்பிட்ட அழுத்தத்தை மட்டுமே தாங்கும் என்பதால் அதை கவனமாக கையாள வேண்டும் எனவும் கூறுகிறார்.
வருமானம்
Thenga பிராண்ட் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மரியா சுமார் 4,000-5,000 தேங்காய் பொருட்களை விற்பனை செய்து, இதன் மூலம் தற்போது மாதம் ரூ.7-8 லட்சம் சம்பாதிக்கிறார்.
டிஜிட்டல் பிஸ்னஸ்
அவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் மொத்தமாக ஆர்டர் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள். தெங்கா கோகோவின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இந்த பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications