இன்ஜினியர் டூ விவசாயி.. இயற்கை உரம் தயாரிப்பில் வருடம் 2 கோடி அள்ளும் இளைஞர்..!

உத்தரபிரதேசம்: விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்க வேண்டும், மண்ணின் தரமும் நீடிக்க வேண்டும் இதற்கு ஏற்ற வகையில் நவீன வகையில் உயிரி உரங்களை உற்பத்தி செய்து வழங்குகிறார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர்.

அக்சய் ஸ்ரீவாஸ்தவ் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயது முதலே விவசாய நடைமுறைகள் பழக்கவழக்கமானது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்றபோது இவருக்கு விவசாயிகளுக்கு உதவக்கூடிய விளைச்சலை அதிகமாக கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே உரங்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் ஆர்வம் காட்டினார்.

 இன்ஜினியர் டூ விவசாயி.. இயற்கை உரம் தயாரிப்பில் வருடம் 2 கோடி அள்ளும் இளைஞர்..!

2017 ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஐஐடி பிஎச்யூ-வின் பேராசிரியர் பி.கே.மிஸ்ரா அவர்களின் தொடர்பு கிடைத்தது. இதனை அடுத்து பி.கே.மிஸ்ரா அவர்களோடு இணைந்த அக்சய் உயிரி உரங்கள் (Biofertilizer) தொடர்பான தன்னுடைய ஆய்வினை தீவிர படுத்தினார்.

பயிர்களுக்கு ஏற்ற வகையிலான உயிரி உரங்களை தயாரித்து பயன்படுத்தும் போது அதன் மகசூல் அதிகரிக்கிறது, மேலும் மண்ணின் தரமும் நிலை நிறுத்தப்படிகிறது. இது நீடித்த நிலையான விவசாய நடைமுறைக்கு உதவும் என்பதை அறிந்தார்.

அக்ஷய் முதலில் இரண்டரை கிலோ எடை கொண்ட உயிரி உரங்களை தயாரித்தார். அதனை ஆய்வகத்தில் பயன்படுத்திய போது சிறந்த முடிவுகள் கிடைத்தன. இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு எல்சிபி ஃபெர்டிலைசர் (LCB Fertilizers) என்ற பெயரில் தன்னுடைய அக்ரி ஸ்டார்ட் அப்பை தொடங்கினார்.

இவரது நிறுவனம் கோதுமை, அரிசி மற்றும் கரும்பு பயிர்களுக்கு என பிரத்தியேகமாக உயிரி உரங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. கிட்டத்தட்ட 23 பயிர்களுக்கு ஏற்ற வகையிலான உரங்களை இவர்கள் தயாரித்து வழங்குகின்றனர். இதனை பயன்படுத்தியவர்கள் தங்களுக்கு நல்ல மகசூல் கிடைத்திருப்பதாகவும் பயிர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

மண்ணின் வகை என்ன அந்தப் பகுதியில் நிலவக்கூடிய காலநிலை என்ன என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இவர்கள் உயிரி உரங்களை தயாரிக்கின்றனர். 50 கிலோ கொண்ட உயிரி உரங்களை 600 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனம் லிக்னீன் இருந்து தயாரிக்கப்பட்ட பாலிமர்களை பயன்படுத்தி இந்த உரங்களை தயாரிப்பதால் இது மண்ணின் ஈரத்தன்மையை தக்க வைக்கிறது. இதனால் பயிர்களின் விளைச்சல் அதிகமாகிறது. எனவே பாரம்பரிய உர நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது இது விலை குறைந்த நடைமுறையாக இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் இதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

தற்போது இவர்களது நிறுவனம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பீகார் , பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் உரங்களை விற்பனை செய்கிறது. தங்களுடைய உர உற்பத்தி ஆலைகளை பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தி வருகிறது.

தற்போதைய சூழலில் இந்த நிறுவனம் சுமார் 35 ஆயிரம் விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் மாதத்திற்கு 50 கிலோ உயிரி உரங்களை இவர்கள் தயாரித்தனர். 2020 ஆம் ஆண்டு இறுதியில் இது மாதத்திற்கு 500 கிலோ என்ற அளவில் உயர்ந்தது. தற்போது இவர்களது நிறுவனம் 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக உருவாகி இருக்கிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+