பெங்களூரு: இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி EDUTECH நிறுவனமான அன்அகாடமியில் (UNACADEMY) தலைமை பதவிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் ஹேமேஸ் சிங் பதவி விலகியதை அடுத்து, தற்போது நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜக்னூர் சிங் பதவியில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜக்னூர் சிங் அடுத்த ஆறு மாத காலங்களுக்கு நோட்டீஸ் பீரியட்டில் இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் எஜூடெக் பிரிவில் யூனிகார்ன் நிறுவனமாக இருக்கக்கூடிய அன்அகாடமியில் ஜக்னூர் சிங்கக்கு பதிலாக புதிதாக யாரும் வேலைக்கு எடுக்கப் போவதில்லை என தெரியவந்துள்ளது. துணை நிறுவனர்களான கௌரவ் மஞ்சல் மற்றும் சுமித் ஜெயின் ஆகியோர் அவரது பணிகளையும் சேர்ந்து கவனித்துக் கொள்வார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் இலக்குகளை எட்டும் நோக்கில் இவர்கள் இருவருமே பல்வேறு பொறுப்புகளை கையில் எடுக்கப் போவதாக இந்த நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அன் அகாடமி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வந்தவரும் துணை நிறுவனமான ஹெமேஸ் சிங் கடந்த மாதம் தன்னுடைய பதவி விலகலை அறிவித்தார். அவரது அறிவிப்பு வெளியாகி ஒரு மாத காலமே ஆகிய நிலையில் மற்றொரு பதவி விலகல் வெளியாகி உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் ஹெமேஸ் சிங் மற்றும் கௌரவ் மஞ்சக் மற்றும் ரோமன் சைனி ஆகியோர் இணைந்து அன்அகாடமி என்ற எஜுடெக் நிறுவனத்தை தொடங்கினர். பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 91 ஆயிரம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். 99 மில்லியன் பேர் பதிவு செய்து பாடங்களை கற்று வருகின்றனர். தங்களுடைய நிறுவனத்தில் பல்வேறு மறு கட்டமைப்பு பணிகளை அன் அகாடமி மேற்கொண்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அவர்களில் 150 பேர் விற்பனை துறையில் இருந்தவர்கள். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டாததன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
2023 ஆம் நிதியாண்டில் அன் அகாடமி நிறுவனம் தங்களுடைய இழப்பு விகிதத்தை 40% குறைத்து இருந்தது. இதுநாள் வரை இந்த நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை நிதியாக திரட்டியுள்ளது. பைஜூஸ் நிறுவனம் திவாலானதை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய எஜூடெக் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருப்பவர்கள் பதவி விலகுவது பேசு பொருளாகி இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

பெங்களூரில் தண்ணீர் சப்ளை கட்.. மக்களுக்கு திண்டாட்டம் தான்..!

நச்சுன்னு நாலு திட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் கர்நாடக..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?



Click it and Unblock the Notifications