பெங்களூர்: இந்தியாவில் உருவான மைக்ரோபிளாகிங் தளமான 'கூ' நிறுவனம், நிதி தட்டுப்பாடு காரணமாக ஏப்ரல் மாதம் முதல் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
சமீபத்தில் எட்டெக் சேவை நிறுவனமான பைஜூஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்த நிலையில், பைஜூ ரவீந்திரன் பர்சனலாக கடன் பெற்று ஊழியர்களுக்கு ஒரு பகுதி சம்பளம் மட்டும் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் Koo நிறுவனத்தைக் கையகப்படுத்தும் கூட்டு நிறுவனத்தைத் தேடும் பணியில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு இந்நிறுவனம் எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கான சூழல் மிகவும் கடினமாக மாறியுள்ள நிலையில், வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக, நிதியை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அல்லது பிற நிறுவனத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டு வருவதாக Koo நிறுவனத்தின் இணை நிறுவனர் மயான்க் கடந்த 2023 செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஸ்டார்ட்அப் துறையில் மோசமான நிதி தட்டுப்பாடு நிலவும் சூழலில், இந்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்பட்ட வகையில் செல்லவில்லை, கணிக்கப்பட்டதை விடவும் அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது.
இந்த நிலையில் மயான்க் வியாழக்கிழமை லிங்கிடுஇன் பதிவில் ஊழியர்கள் சம்பளத்தையும், வென்டார்களுக்கு பேமெண்ட்களையும் வழங்குவதற்காக நிறுவனம் தனது நிதி ஆதார வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
Koo நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது சிறப்பாக உருவாக்கப்பட்ட மற்றும் முழுமையாகத் தானியங்கு முறையில் இயங்கும் ஒரு ப்ராடெக்ட். இதன் செயல்பாட்டிற்கு அதிகப்படியான மேனுவல் ஆப்ரேஷனஸ் தேவையில்லை. இன்று நாங்கள் எப்படியிருந்தாலும், இத்தளத்தை உருவாக்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று மயான்க் கூறினார்.
மேலும், செப்டம்பர் 2023 இல் வெளியான தி அர்க் அறிக்கையில், 2022 ஜூன் மாதத்தில் நடைபெற்ற கடைசி நிதி திரட்டல் சுற்றில் Koo நிறுவனம் ரூ.2,230 கோடி மதிப்புடையதாக இருந்ததாகவும், அப்போது வங்கிக் கணக்கில் ரூ.20 கோடி மட்டுமே இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications