MSME-க்கான Guaranteed Emergency Credit Line நன்மைகள் என்ன? பாகம் 2!

சிறு குறு தொழில் செய்யும் MSMEயினர்கள் தவிர வேறு யார் எல்லாம் இந்த Guaranteed Emergency Credit Line திட்டத்தைப் பயன்படுத்தி கடன் வாங்கலாம்? எவ்வளவு கடன் வாங்கலாம்? நாம் வாங்கும் கடனுக்கு யார் கேரண்டி கொடுக்கிறார்கள்? எந்த வங்கிகளில் இந்த திட்டத்தின் கீழ் கடன் கிடைக்கும்? எப்போதுக்குள் வாங்க வேண்டும் என பல கேள்விகளுக்கு பாகம் 1-ல் விடை கொடுத்து இருக்கிறோம்.

இந்த இரண்டாவது பாகத்தில் Guaranteed Emergency Credit Line திட்டத்தால் என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பார்க்க இருக்கிறோம்.

கடன் தகுதி என்ன

கடன் தகுதி என்ன

அரசு வலைதளத்தில் சொல்லி இருப்பது போல, 29 பிப்ரவரி 2020 அன்று 25 கோடி ரூபாய் வரை கடன் வைத்திருப்பவர்கள் மற்றும் 2019 - 20 நிதி ஆண்டில் 100 கோடி ரூபாய்க்குள் டேர்ன் ஓவர் வைத்திருப்பவர்கள் மட்டுமே Guaranteed Emergency Credit Line திட்டத்தின் கீழ் கடனை வாங்க முடியும்.

கடனுக்கு வட்டி எவ்வளவு

கடனுக்கு வட்டி எவ்வளவு

பாகம் 1-லேயே 25 கோடி ரூபாய் வரை கடனும், கூடுதலாக 5 கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொள்ளலாம் எனச் சொல்லி இருந்தோம். இந்த கடனை வங்கியில் வாங்கினால் 9.25 % வட்டி வசூலிப்பார்களாம். அதுவே கடனை (NBFC) வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வாங்கினால் 14 % வரை வட்டி வசூலிப்பார்களாம்.

கடன் கால அளவு

கடன் கால அளவு

இந்த Guaranteed Emergency Credit Line திட்டத்தின் வழியாக வாங்கும் கடனுக்கான கால அளவு 4 வருடங்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாமாம். அதே போல முதல் 12 மாதங்களுக்கு அசல் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டாமாம். இது தான் இந்த திட்டத்தில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம்.

மேற்படி கட்டணங்கள்

மேற்படி கட்டணங்கள்

Guaranteed Emergency Credit Line திட்டத்தின் வழியாக கடன் கொடுக்கும் வங்கிகள் அல்லது National Credit Guarantee Trustee Company Limited அமைப்பு என யாரும், எந்த ஒரு கூடுதல் கட்டணமோ அல்லது கேரண்டி கட்டணங்களோ வசூலிக்கமாட்டார்கள் என தைரியம் கொடுக்கிறது அரசு வலைதளம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+