MSME-க்கான Guaranteed Emergency Credit Line பாகம் 1!

கொரோனா காலத்தில் MSME தரப்பினர் சிரமப்படக் கூடாடு என்பதற்காக மத்திய அரசு அறிவித்த சிறப்புக் கடன் திட்டம் தான் இந்த Guaranteed Emergency Credit Line.

மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பில் ஒரு பகுதி தான் இந்த 3 லட்சம் கோடி ரூபாய் Guaranteed Emergency Credit Line கடன் திட்டம்.

அப்படி இந்த கடன் திட்டத்தில் என்ன ஸ்பெஷல். இந்த கடன் திட்டத்தைப் பற்றிய ஒரு குட்டி ரவுண்ட் அப்பைப் தான் சில பாகங்களாகப் பார்க்க இருக்கிறோம்.

யார் எல்லாம் வாங்கலாம் FAQ 3

யார் எல்லாம் வாங்கலாம் FAQ 3

சிறு குறு தொழில்முனைவோர்களாக பதிவு செய்து இருப்பவர்கள், தனி நபர் முதலாளிகள் (Proprietorships), கூட்டு நிறுமங்கள் (Partnership Firms), பதிவு செய்த கம்பெனிகள், ட்ரஸ்டுகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுமங்கள் ( Limited Liability Partnerships - LLPs), முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்து இருப்பவர்கள்... இந்த Guaranteed Emergency Credit Line திட்டம் வழியாக கடன் வாங்கலாம். FAQ 3

எவ்வளவு வாங்கலாம் FAQ 1

எவ்வளவு வாங்கலாம் FAQ 1

Guaranteed Emergency Credit Line வழியாக சிறு குறு தொழில்முனைவோர்கள், அதிகபட்சமாக, ஏற்கனவே வாங்கி இருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 20 % வரை அல்லது 25 கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம். 29 பிப்ரவரி 2020 காலத்தில் இருக்கும் கடன் நிலுவைத் தொகையை கணக்கில் எடுத்துக் கொள்வார்களாம். அது போக கூடுதலாக 5 கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாமாம்.

கேரண்டி FAQ 3

கேரண்டி FAQ 3

Guaranteed Emergency Credit Line திட்டத்தின் வழியாக, சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) கொடுக்கும் கடன் தொகைக்கு, National Credit Guarantee Trustee Company (NCGTC) என்கிற அமைப்பு 100 % கேரண்டி கொடுக்குமாம்.

எந்த வங்கிகளில் கிடைக்கும் FAQ 4

எந்த வங்கிகளில் கிடைக்கும் FAQ 4

இந்தியாவில் இருக்கும் அனைத்து பட்டியலிட்ட வணிக வங்கிகளிலும் இந்த Guaranteed Emergency Credit Line திட்டம் வழியாக கடனைப் பெறலாம். அதே போல, 29 பிப்ரவரி 2020 தேதிக்குள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டு செயல்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும், இந்த Guaranteed Emergency Credit Line திட்டத்தின் கீழ் கடன் கொடுக்குமாம்.

எப்போதுக்குள் வாங்க வேண்டும் FAQ 6

எப்போதுக்குள் வாங்க வேண்டும் FAQ 6

இந்த Guaranteed Emergency Credit Line கடன் திட்டத்தின் கீழ் முதலில் கொடுக்கப்படும் 3 லட்சம் கோடி ரூபாய், அல்லது, மே 23 முதல் 31 அக்டோபர் 2020 வரையான காலத்தில் கொடுக்கப்படும் கடனுக்கு 100 % கேரண்டி வழங்கப்படுமாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+