இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சி இலக்கினை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும். இது வளர்ச்சிக்கு உந்துதலாக மாற வேண்டுமானால், இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது என்றும் நோமுரா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விநியோக சங்கிலிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே ஆத்மனிர்பர் பாரத் அல்லது தன்னம்பிக்கை கொண்ட இந்தியா எனும் திட்டத்தினை பற்றி கூறியுள்ளது. இது உள்ளூர் தொழில்களை வலுப்படுத்த உதவும். இது இந்திய நிறுவனங்கள் உலகளவில் செல்ல உதவும்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2020ம் ஆண்டில் 13 சதவீதம் குறைந்து 32 சதவீதமாக குறையும் என்றும் உலக வர்த்தக அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பொறுத்தவரையில், உள்நாட்டு சந்தையை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் இயங்கி வருகின்றன. அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய வீரர்களால் இந்த விநியோகம் இயக்கப்பட்டும் வருகிறது. இது வளர்ந்து வரும் நுகர்வு மற்றும் அதிகரிக்கும் போட்டியை சமாளிப்பதற்கும் போன்ற எம்எஸ்எம்இ-க்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இயக்கியும் வருகின்றன என்று NRI Consulting & Solutions நிறுவனத்தின் பங்குதாரரும் மற்றும் குழுமத் தலைவருமான ஆஷிம் சர்மா கூறியுள்ளார்.
எனவே வாடிக்கையாளார்களுக்கு தேவையான தயாரிப்புகளை வடிவமைத்தல் உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்வது எம்எஸ்எம்இ-களுக்கு மிகவும் முக்கியமானது.
எம்எஸ்எம்இ-க்களின் வெற்றிக்கு முக்கிய மூன்று முக்கிய அளவுருக்கல் உள்ளன. ஒன்று நிதி ஸ்திரத்தன்மை மற்றும் திறமையான தொழிலாளர்கள், இறக்குமதி மாற்றீடு உள்ளிட்டவற்றினை உள்ளடக்கியது, மேலும் அதே போல ஏற்றுமதியை அடைய அவர்களின் தயாரிப்புகளின் சந்தை திறனும் அடங்கும்.
தற்போது கொரோனா காரணமாக புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்துவதால், தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கான இந்திய எம்எஸ்எம்இ-க்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதே போல சந்தையின் தேவைக்கு ஏற்ப எம்எஸ்எம்இ-க்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் உலகளாவிய விநியோக சங்கிலிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூலதனம் கிடைப்பது கஷ்டமாகும். மேலும் செலவினைக் குறைக்க புதுமையான நடவடிக்கைகள் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications