2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு நிறுவனங்கள் அல்லது பெரு நிறுவனங்களுக்குச் சரக்குகள் அல்லது சேவைகளை வழங்கிய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), சேவை வழங்கிய நாள் முதல் 45 நாட்களுக்குள் பேமெண்ட் செலுத்த வேண்டும் என்று வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் MSME நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியாக மத்திய நிதியமைச்சகம் வருமான வரி சட்டத்தில் புதிய விதி சேர்க்கப்பட்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

ஆனால், இந்த விதி தற்போது சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த 45 நாட்களுக்குள் பேமெண்ட் என்ற விதி பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பெரு நிறுவனங்கள் கொடுத்த ஆர்டர்களை ரத்து செய்து, பதிவு செய்யப்படாத MSME நிறுவனங்களுக்கு ஆர்டர்களை வழங்குவது அதிகரித்து வருகிறது.
இந்த புதிய விதியை எதிர்த்து சில MSME சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினாலும், இந்த சிக்கலுக்கு தீர்வு காண மத்திய MSME துறை, தொழில் துறை நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி சட்டத்தால் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும், MSME -களுக்கான கட்டணங்களைச் சரியான நேரத்தில் தீர்த்து வைப்பதற்கான மாற்று வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் பங்குதாரர்களிடம் MSME துறை கேட்டுள்ளது.
2023-24ம் நிதிய ஆண்டிற்கான நிறுவனங்களின் பரிவர்த்தனைகளைத் தணிக்கை செய்யப்படும் வேளையில், பெரிய நிறுவனங்கள் MSME நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய வரி பாதிப்பு அதிகமான இருப்பதே பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்குச் செல்ல முக்கிய காரணமாக உள்ளது.
மேலும், இந்த புதிய வரி விதிமுறை காரணமாகப் பல MSME உரிமையாளர்கள் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். பெரிய நிறுவனங்கள் பதிவு செய்யப்படாத MSME களுக்கு ஆதரவு தருவது அதிகரித்து வருவதாகவும் MSME கள் கவலை தெரிவித்து வருகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, மத்திய MSME துறை இந்த விதியை மறுசீரமைப்பு செய்து 45 நாள் என்பதை 90-120 நாட்கள் என்ற நீண்ட கால அவகாசத்தை அளிப்பது மூலம் எளிதாக தீர்க்க முடியும் என்ற பரிந்துரையும் அளிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications