சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் அளித்து ஊக்குவிக்க நிதி அமைச்சர் அருண் ஜேடில் புதிதாக www.psbloansin59minutes.com என்ற இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இந்த இணையதளம் மூலம் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதியை எளிதாகப் பெற முடியும்.
இந்தக் கடன்களை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளில் மட்டும் பெற முடியும்.
இதற்கு முன்பு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கான அனுமதியைப் பெற 20 முதல் 20 நாட்கள் வரை தேவைப்படும்.
எந்த வங்கிகளில் எல்லாம் இந்த 59 நிமிட கடனுக்கு அனுமதி கிடைக்கும்?
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பாங்க் ஆ பரோடா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, விஜயா வங்கி மற்றும் இந்தியன் வங்கிகளில் இந்த 59 நிமிட கடனுக்கு அனுமதி கிடைக்கும்.
வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை?
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தக் கடன்களுக்கு விண்ணப்பிக்க வங்கி கிளைக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கடன் விநியோகிக்கப்படும் வரை மனித தலையீடு என்பதே இருக்காது. இதற்காக வருமானவரி, ஜிஎஸ்டி , வங்கி அறிக்கை போன்றவற்றைச் சரிபார்க்கச் சிறப்பு மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும்.
ஜிஎஸ்டி
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஜிஎஸ்டி எண், ஜிஎஸ்டி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
வருமான வரி
நிறுவனத்தின் பேரில் செலுத்தப்பட்ட கடந்த 3 வருடத்திற்கான வருமான வரி விவரங்கள், நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான ஆவணங்கள், வருமான வரி செலுத்துவதற்கான கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும்.
வங்கி விவரங்கள்
நடப்பு வங்கி கணக்கின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல், 6 மாத வங்கி அறிக்கை உள்ளிட்ட விவரங்களையும் பிடிஎப் கோப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிமையாளர்கள்
இயக்குநர் / பங்குதாரர் / உரிமையாளர் விவரங்கள்: அடிப்படை, தனிப்பட்ட, KYC, கல்வி விவரங்கள் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்ற விவரங்களையும் அளிக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications