சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இந்த முத்ரா யோஜனா அரசின் திட்டமாகும்,
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இது கடந்த ஏப்ரல் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும்.
புதியதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் ஊக்குவிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இத்திட்டத்தின் மூலம் தொழிலை ஆரம்பிப்பவர்களில், 5ல் ஒருவர் தான் புதிய தொழிலை ஆரபிக்கிறார்களாம். மீதமிருப்பவர்கள் ஏற்கனவே உள்ள தொழிலை தான் விரும்புகிறார்களாம்.
இருக்கும் தொழிலைத் தான் செய்கிறார்கள்
புதியதாக தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், இது வேலை வாய்ப்பு வாய்ப்பையும் அதிகரிக்கும் என்ற அரசால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர் அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், முத்ரா பயனாளர்களில் 5ல் ஒருவர் (20.6 சதவிகிதம்) பேர் மட்டுமே புதிய தொழிலை மேற்கொள்ளவதாகவும், மீதமிருப்பவர்கள் இருக்கும் தொழிலுக்காக, இந்த நிதியை உபயோகித்து விரிவாக்கம் செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்த வேலை வாய்ப்புகள் இவ்வளவு தான்
தொழிலாளர் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி, கடந்த ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2017 வரை, 1.12 கோடி கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் 33 மாதங்களில் 51.06 லட்சம் சுயதொழில் செய்வபவர்கள் இருக்கிறார்கள் என்றும், இதுவே 60.94 லட்சம் ஊழியர்கள் அல்லது கூலித் தொழிலாளர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள் குறைவு
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் 33 மாதங்களில், மொத்தக் கடன்களின் எண்ணிக்கையில், 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், 97,000 பயனாளிகளிடம், கடந்த ஏப்ரல் - நவம்பர் 2018க்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இன்னும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழங்கப்பட்ட மொத்த கடன்
அதில் முதல் மூன்று ஆண்டுகளில் 12.27 லட்சம் கணக்குகள் மூலம், 5.71 லட்சம் கோடி ரூபாய் கடன், சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வழங்கப்பட்ட கடன்களின் சராசரி அளவு 46,536 ரூபாய் எனவும் கூறப்பட்டுள்ளது. சிசு (SHISHU) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 வரை கடன் பெறலாம். குறிப்பாக கடந்த 2017 - 2018ம் ஆண்டில் வழங்கப்பட்ட கடனில் 42 சதவிகிதம் இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டதே என்றும் கூறப்படுகிறது. இதே கிஷோர் (KISHOR) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 - 5 லட்சம் வரை கடன் பெறலாம் என்ற நிலையில், இத்திட்டத்தின் மூலம் 34 சதவிகித தொகையும், இதே தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் - 10 லட்சம் வரை கடன் பெறலாம் என்ற நிலையில், இந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மீதமுள்ள 24 சதவிகித தொகையும், கடனாக பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு வேலைவாய்ப்புகள்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் சிசு திட்டத்தின் மூலம் 66 சதவிகித புதிய வேலை வாய்ப்புகளும், இதே கிஷோர் திட்டத்தின் மூலம் 18.85 சதவிகித புதிய வேலை வாய்ப்புகளும், இதே தருண் திட்டத்தின் மூலம் வெறும் 15.51 சதவிகித புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு தான் புதிய தொழிள்கள்
முத்ரா திட்டத்தில் மொத்தம் வாங்கப்பட்ட கடனில், 19,396 (20.6 சதவிகிதம்) தொழில்கள் மட்டுமே புதியதாக ஆரம்பிக்கப்பட்டது என்றும், இதுவே முன்னர் இருந்த பழைய தொழில்களையே விரிவாக்கம் செய்தவர்கள் அல்லது இருக்கும் தொழிலையே செய்பவர்கள் 74,979 (79.4 சதவிகிதம்) பேர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications