ஒவ்வொரு ஆண்டும் மத்திய மாநில அரசுகள் பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாகப் பல துறை சார்ந்த அமைப்புகள், அவரவர் துறைக்கான கோரிக்கைகளை அரசுகளிடம் முன்வைப்பது வழக்கம். அப்படி அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அரசுக்கும், மக்களுக்கும் , பொருளாதாரத்திற்கும் சாதகமாக இருப்பின் அரசு அதை நடைமுறைப்படுத்தும்.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்களின் தலையாய அமைப்பான நாஸ்காம், வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட்அப்கள், தற்போதுள்ள வெளிப்புற கட்டமைப்புகளுக்குள்ளேயே, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட அனுமதி அளிக்க 2024-25 பட்ஜெட்-க்கு முக்கியப் பரிந்துரையாக முன்வைத்துள்ளது.

நாஸ்காம் செய்த ஆய்வில் பங்கேற்ற 139 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 16.5 சதவீத இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் externalised legal structures கீழ் உள்ளது. தற்போது மத்திய அரசு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதித்தால் 16.5 சதவீத இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஐபிஓ வெளியிட்டு நிதி திரட்ட தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பே நாஸ்காம் அமைப்பு, சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மற்றும் நிதி அமைச்சகம் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட்அப்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான ப்ரேம்வொர்க் குறித்து ஆலோசனை செய்துள்ளது.
ஆனால் முதல் முறையாக நாஸ்காம் பட்ஜெட் பரிந்துரையாக முன்வைத்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறையில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தான் ஐபிஓ வெளியிட முடியும். இந்த விதிமுறை தளிர்க்கப்பட்டால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவில் வரிப் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு ICEA அமைப்பு உலகில் 7 முக்கிய உற்பத்தி நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து மத்திய அரசு நாளை இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் வேளையில் இன்று பல்வேறு உதிரிபாகங்களின் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications