டெல்லி: அடுத்த கட்ட பொருளாதாரச் சலுகை குறித்து வாசிக்கத் தொடங்கியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடம் பெயர் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஐந்து அம்ச அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் மூன்று அறிவிப்புகள் இடம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக மாநில அரங்களுக்கு இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் இதுவரையில் 6,700 கோடி ரூபாய் மூலதன உதவி வழங்கப்பட்டுதாக கூறியுள்ளார். இப்படி பல சலுகைகள வழங்கி வந்த நிலையில் முதல் முறை சலுகைகளை அறிவித்த போதும், சரி, கடந்த புதன் கிழமையன்று அறிவித்த திட்டங்களிலும் சிறு குறு தொழில் முனைவோருக்கு பல சலுகைகளை அறிவித்தார்.
இப்படி இருக்கையில் இன்று 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களுக்கு 5000 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதி உதவி ஒருவருக்கு 10,000 ரூபாய் வரை கடன் வசதி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அதோடு சாலையோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனமாக பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது கொரோனாவினால் முடங்கி போயுள்ள வாழ்வாதத்தினை மீட்டெடுக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications