பிரபல ஓலா நிறுவனம் கூடிய விரைவில் மற்றும் ஸெப்டோ மற்றும் பிளிங்கிட்டுக்கு போட்டியாக குயிக் காமர்ஸ் துறையில் நுழைய கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பவிஷ் அகர்வால் தலைமையில் செயல்பட்டு வரக்கூடிய ஓலா நிறுவனம் ஓலா கேப்ஸ் என்ற பெயரில் வாடகை ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகன சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஓலா எலக்ட்ரிக் என்ற பெயரில் இந்த நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
கூடிய விரைவில் இந்த நிறுவனம் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் அண்மைக்காலமாகவே மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக வீட்டிற்கு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் சேவை அதிகமாக தேவைப்படுகிறது. இதனை தொடர்ந்து ஓலா நிறுவனம் இந்த துறையிலும் கால் பதிக்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளத. இதன்படி ஓலா நிறுவனம் பல்வேறு நகரங்களில் தங்களுடைய கிடங்குகளை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த கிடங்குகளில் இருந்து மக்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் விரைவாக டெலிவரி செய்யப்படும். இந்த கிடங்குகளில் ரோபோக்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பவிஷ் அகர்வாலுக்கு சொந்தமான ஓலா நிறுவனம் தங்களுடைய சொந்த யுபிஐ சேவையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகினது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓலா நிறுவனம் சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.
ஓலா நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் மளிகை பொருட்கள் டெலிவரி, யுபிஐ சேவை போன்ற தகவல்கள் வெளியாகும் என எக்னாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும் வகையில் இந்த கிடங்குகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் ஓலா மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி இந்த டெலிவரி சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓலா நிறுவனம் ஓலா டேஷ் என்ற பெயரில் குயிக் காமர்ஸ் சேவையை தொடங்கியது ஆனால் 2022 ஆம் ஆண்டில் அதனை மூடிவிட்டது.
தற்போது புதிய நுட்பங்களுடன் இந்த துறையில் களமிறங்குகிறது. குயிக் காமர்ஸ் துறை இந்தியாவில் வேகமாக வளரும் துறையாக இருக்கிறது. இதன் காரணமாகவே பிளிங்கிட் தளத்தை ஸொமேட்டோ கைப்பற்றியது. இதன் பிறகு ஸோமேட்டோவின் வளர்ச்சி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதே போல ஸெப்டோ நிறுவனமும் வேகமாக வளர்ந்து வருகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications