டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் அளிக்கக் கூடிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை 59 நிமிடத்தில் பெற முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது மட்டும் இல்லாமல் 12 முக்கிய அறிவிப்புகளைத் தீபாவளி பரிசாக அளித்துள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வர இருக்கும் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும் போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு நலிவடைந்துள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோடியின் இன்றைய அறிவிப்பு இருந்தது.
கடன்
மோடி அவர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் அளிப்பது மட்டும் இல்லாமல் அவற்றில் செய்யப்படும் முதலீட்டினை 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி விலக்கு
சிறு நிறுவனங்கள் 1 கோடி ரூபாய் வரை கடன் பெற்று இருக்கும் போது அவற்றுக்கு 2 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பரிசு
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தற்போது அளிக்க உள்ள 12 ஆலோசனைகள் தீபாவளி பரிசாக மட்டும் இல்லாமல் புதிய வரலாற்றினைப் படைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications