கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்முனைவோர்களை (MSME) ஊக்குவிக்கவும், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும், மத்திய அரசு, சமீபத்தில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு Emergency Credit Line Guarantee Scheme (ECLGS)-மைத் அறிவித்தார்கள்.
இந்த 3 லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டம் தான் இணையத்தில் பரவலாக பேசப்படும் MSME Loan Scheme. பிணை இல்லாக் கடன். முதல் 12 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்த வேண்டாம். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. மொத்தம் 4 ஆண்டு கடன் காலம்.
இந்த கடன் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள Laghu Udyog Bharti (LUB) என்கிற ஆர் எஸ் எஸ்-ன், தொழில் அமைப்பின் பொதுச் செயலர் கோவிந்த் லிலேவை அழைத்து கருத்துக்களைக் கேட்டு இருக்கிறார் நிதி அமைச்சர்.
அரசு வங்கிகள்
அதற்கு பதிலளித்த கோவிந்த், பொதுத் துறை வங்கிகள், அரசின் கடன் திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் வங்கிக் கிளைகளில், MSME-யினருக்கான கடனை அப்ரூவ் செய்யும் போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் லாப விவரங்களைக் கேட்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமே புகார் சொல்லி இருக்கிறாராராம்.
தனியார் வங்கிகள்
சரி அரசு வங்கிகளில் பிரச்சனை இப்படி போகிறது, தனியார் வங்கிகளில் நிலைமை என்ன..? "தனியார் வங்கிகள் மத்திய அரசின் MSME-யினருக்கான கடன் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாமல், தாமதித்துக் கொண்டு இருக்கிறார்கள்" என நெற்றியில் அடித்தாற் போல நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சொல்லி இருக்கிறார் கோவிந்த் லிலே.
பெரிய கடன்கள் மட்டும்
அதோடு விட்டாரா என்றால் இல்லை. "வங்கிகள் தங்கள் கடன் இலக்கை அடைய, நிறைய கடன் வாங்கும் பெரிய வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே அதிகம் கடன் கொடுக்கிறார்கள். வங்கிகள், Emergency Credit Line Guarantee Scheme (ECLGS)-ல் எல்லா தரப்பினருக்கும் கடனை வழங்கச் சொல்லி அரசு அறிவுறுத்த வேண்டும்" எனவும் சொல்லி இருக்கிறாராம்.
கூட்டுறவு வங்கிகள்
இது போக, Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) திட்டத்தில், பட்டியலிடப்படாத கூட்டுறவு வங்கிகளையும் (Non Scheduled Co-Op Bank) இணைக்கச் சொல்லி, கோவிந்த் கோரிக்கை வைத்து இருக்கிறாராம். நிறைய MSME-க்கள் பட்டியலிடப்படாத கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications