சென்னையைச் சேர்ந்த இளம் வயது தொழில்முனைவோரான ஆனந்த் மேகலிங்கத்தின் வாழ்க்கைப்பயணம் இந்தியாவின் விண்வெளி டெக்னாலஜி துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாதாரண நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஆனந்த் மேகலிங்கத்தின் தந்தை ஒரு டிராக்டர் டிரைவர். தாயார் இல்லத்தரசி.
ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் ஆனந்தின் கனவுகள் மிகப் பெரியவை. பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பை ஆனந்த் படித்தார். முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் அவர் பெயில் ஆனார். அவரோடு சேர்த்து பிற டிபார்ட்மென்ட்களைச் சேர்ந்த 9 மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆனந்த் மேகலிங்கத்துக்கு எந்தவித வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அவரது விளையாட்டு திறனால் முழு ஸ்காலர்ஷிப்புடன் ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு அவர் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தார். இதுதான் அவரது வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது.
எனது கல்லூரி வளாகத்துக்குள் ஒரு விமானத்தைப் பார்த்தபோது நான் பரவசமடைந்தேன். படிக்கும்போதே கிளைடர், பேப்பர் பிளேன் தயாரித்தல் போட்டிகளில் பங்கேற்பேன். போட்டியில் வெற்றி பெற்று கிடைக்கும் பரிசுப் பணத்தை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவேன்.
ஒரு போட்டியில் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்தி பேப்பர் பிளேன் ஒன்றை தயாரித்தேன். அதற்கு ரூ.500 ரொக்கப் பரிசு கிடைத்தது என்றார் ஆனந்த்.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அவர் பெற்றுள்ளார். ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷனின் இளம் வயது விஞ்ஞானிக்கான விருதை புதுச்சேரி முதல்வரிடமிருந்து பெற்றார்.
பிடெக் ஏரோனாடிகல் இன்ஜினியரிங் முடித்ததும் ஆன்டி-டிரோன் டெக்னாலஜியில் எம்எஸ் படித்தார். ஜனவரி 2021இல் எம்எஸ் படிப்பின் இறுதித் தேர்வு இருந்தது. ஆனால் திட்ட செயல் இடம் ராமேஸ்வரத்தில் இருந்ததால் படிக்கமுடியாமல் நிறுத்த வேண்டியிருந்தது என்றார் ஆனந்த்.
ஆனாலும் விடாப்படியாக முயற்சித்த ஆனந்த் டிசம்பர் 2021இல் ஸ்பேஸ் ஜோன் இ்நதியாவை தொடங்கினார். அதில் இணை நிறுவனராக தனது தந்தையை சேர்த்துக் கொண்டார்.
ராக்கெட் டெவலப்மென்ட் மற்றும் லேர்னிங் அண்டு டெவலப்மென்ட் துறைகளில் ஸ்பேஸ் ஜோன் இந்தியா செயல்பட்டு வந்தது. விண்வெளி தொழில்நுட்பத்தை வளர்ப்பதும், மாணவர்கள் இடையில் கல்வியையும் புதுமையையும் வளர்ப்பதும் நோக்கமாக செயல்பட்டது.
ஸ்பேஸ் ஜோன் இந்தியாவின் ராக்கெட் டெவலப்மென்ட் பிரிவு ஹைபிரிட் புரபல்ஷன் சிஸ்டம்களில் கவனம் செலுத்தி வருகிறது. திரவ மற்றும் திட எரிபொருள் புரபல்ஷன் நன்மைகளை ஒருகிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ராக்கெட் ஏவுதலை செலவு மலிவானதாகவும் இயற்கைக்கு உகந்ததாகவும் ஆக்க வேண்டும் என ஸ்பேஸ் ஜோன் இ்ந்தியா பாடுபட்டது.
2023இல் இந்தியாவின் முதல் ஹைப்பிரிட் ராக்கெட்டை சென்னையில் இருந்து ஸ்பேஸ் ஜோன் இந்தியா வெற்றிகரமாகச் செலுத்தியது இதுபற்றி கூறுகையில் 2024 ஆகஸ்ட்டில் ரூமி 1 ராக்கெட்டை மறுபயன்பாட்டு டெக்னாலஜியில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று ஆனந்த் கூறினார்.
ஸ்பேஸ் ஜோன் இந்தியா மொபைல் லாஞ்ச் பேடை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஹைட்ராலிக் சிஸ்டம் மூலம் ராக்கெட்களை செலுத்தலாம். இந்தப் புதுமையான டிசைன் நாடுமுழுவதும் ஏராளமான லாஞ்ச் பேடுகளை அமைக்க உதவும்.
ஒரு ராக்கெட்டை செலுத்துவதற்கு பிற நிறுவனங்கள் 8 முதல் 10 கோடி ரூபாய் கட்டணம் வசூலித்தால் அதை ஸ்பேஸ் ஜோன் இந்தியா 5 கோடி ரூபாய்க்குள் செய்ய முடியும் என்று ஆனந்த் கூறினார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 100 சாட்டிலைட்களை ஏவியதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஸ்பேஸ் ஜோன் இந்தியாவை பாராட்டியுள்ளார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications