ஆன்லைன் உணவு தேடல் நிறுவனமான சோமேட்டோ 2016-17ஆம் நிதியாண்டு காலத்தில் வருவாயில் சுமார் 81 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம், வர்த்தக சரிவு என பல பரிச்சனைகளுக்கு மத்தியில் தற்போது சோமேட்டோ 81 சதவீத அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் நஷ்ட அளவுகள் 590 கோடி ரூபாயில் இருந்து இந்தி வருடம் 389 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுகிட்டத்தட்ட சுமார் 34 சதவீதம் குறைவு.
பல மாற்றங்கள்
கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தக முறை மற்றும் நிர்வாக முறை பல வகைகளில் மாற்றப்பட்டுள்ளது, இதன் மூலம் தற்போது அதிக வருவாயும், முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.
வருவாய்
இந்நிலையில் கடந்த வருடம் வெறும் 184 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக பெற்ற சோமேட்டோ தற்போது 333 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட்அப் சந்தையில் உணவு டெலிவரி பரிவில் புதிய நிறுவனங்களும் முதலீடும் எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை விரிவாக்கம்
இந்த வருவாய் உயர்விற்கு முக்கிய காரணம் இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் விளம்பர் வருவாய் 58 சதவீதம் உயர்ந்து 38 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இன்போ எட்ஜ்
இன்றைய நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் நக்கூரி இணைய தளத்தின் தாய் நிறுவனமான இன்போ எட்ஜ் சுமார் 47 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
இந்தியாவில் சோமேட்டோ நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக விளங்குவது ஸ்விகி.


Click it and Unblock the Notifications