இந்தியாவில் சிறு குறு தொழில்முனைவோர்கள் கொரோனா காலத்தில், பணம் இல்லாமல் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், மத்திய அரசு Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின் வழியாக, 3 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்க, மத்திய அரசு அனுமதித்து இருக்கிறது. கடந்த 23 ஜூலை 2020 வியாழக்கிழமை கணக்குப் படி, 1,30,491 கோடி ரூபாய் கடன் கொடுக்க அனுமதி வழங்கி இருக்கிறார்களாம்.
இந்த 1,30,491 கோடி ரூபாயில், 82,065 கோடி ரூபாய் மட்டுமே கடன் தொகை வழங்கப்பட்டு (Disburse) இருக்கிறதாம். இந்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று 24 ஜூலை 2020 அன்று உறுதி செய்து இருக்கிறார்கள்.
இந்த 1,30,491 கோடி ரூபாய் என்பது இந்தியாவின் 12 பொதுத் துறை வங்கிகள், 22 தனியார் துறை வங்கிகள் மற்றும் 23 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்தும் சேர்த்து அனுமதி கொடுத்த தொகையாம்.
பொதுத் துறை வங்கிகள் மட்டும் 71,818 கோடி ரூபாய் கடன் கொடுக்க அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அதில் 47,631 கோடி ரூபாய் பணம் கடனாக வழங்கப்பட்டு (Disburse) இருக்கிறது.
பொதுத் துறை வங்கிகளில் எஸ் பி ஐ வங்கி தான் அதிகபட்சமாக 21,027 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி வழங்கி, 15,112 கோடி ரூபாய் கடனைக் டிஸ்பர்ஸ் செய்து இருக்கிறது. 23 ஜூலை 2020 கணக்குப் படி, எஸ் பி ஐ வங்கியைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் பேங்க் 9,463 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி வழங்கி 5,295 கோடி ரூபாய் கடனை டிஸ்பர்ஸ் செய்து இருக்கிறது.
தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து, மொத்தம் 58,673 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். அதில் 34,433 கோடி ரூபாய் கடன் டிஸ்பர்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications