மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை தளமான ஃபர்ஸ்ட் க்ரை (FirstCry)-இன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சுபம் மகேஸ்வரியின் மாதாந்திர வெகுமதி என்பது 49 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் தளமான ஃபர்ஸ்ட் கிரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுபம் மகேஸ்வரி பெற்று வந்த வெகுமதியானது 2024ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும் 49% குறைந்து அதாவது 16.7 கோடி ரூபாயிலிருந்து 8.6 கோடி ரூபாய் என குறைந்துள்ளது.

2024 ஆம் நிதியாண்டில் சுபம் மகேஸ்வரி முதல் மூன்று காலாண்டில் பெற்ற மொத்த வெகுமதி 77.5 கோடி ரூபாய் ஆகும். ஆனால் 2023 ஆம் நிதியாண்டில் இவர் 200 கோடி ரூபாயை வெகுமதியாக பெற்றிருந்தார். விரைவில் ஐபிஓ வெளியீட்டுக்கு தயாராகி வரும் ஃபர்ஸ்ட்கிரை நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
குறுகிய கால வேலை பலன்கள் மற்றும் பங்குகள் மூலம் கிடைக்கும் லாபங்களில் இருந்து பெறப்பட்ட தொகை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் இந்த வெகுமதி. விரைவில் ஃபஸ்ர்ட் கிரை நிறுவனத்தின் ஐபிஓ வெளியாக உள்ளது. இதன் பொருட்டு சுபம் மகேஸ்வரி நிறுவனத்தில் தன் வசம் இருந்த 6.2 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து விட்டார்.
அப்போது இந்த நிறுவனத்தின் பங்குகள் 487.44 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் மூலம் இவருக்கு 300 கோடி அளவுக்கு கிடைத்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஓ-வில் தன்னை பங்குகளை விற்பனை செய்யக்கூடிய ஒரு நபராகவும் சுபம் மகேஸ்வரி அறிவித்துள்ளார். இதற்கு முன்பு ஃபர்ஸ் கிரை நிறுவனத்தில் சுமார் 7.46 சதவீத பங்குகள் அதாவது 35 லட்சம் பங்குகளை சுபம் மகேஸ்வரி தன் வசம் வைத்திருந்தார்.தற்போது அது 28 லட்சம் பங்குகளாக அதாவது மொத்த பங்கில் 5.95% பங்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் கிரை நிறுவனத்தின் துணை நிறுவனரான சங்கீத் 2024ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டில் 8.3 கோடி ரூபாயை வெகுமதியாக பெற்றிருக்கிறார். இதுவே 2023 ஆம் நிதி ஆண்டில் 18.5 கோடி ரூபாயாக இருந்தது. 2023ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 4,814 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருந்தது. ஆனால் 278 கோடி ரூபாய்க்கு நஷ்டமடைந்ததாக தகவல் வெளியிட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications