இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI பேங்க் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு (MSMEs) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. திங்கள் கிழமை அன்று, SBI பேங்க் MSME சஹஜ் (MSME Sahaj) என்ற புதிய ஆன்லைன் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரங்களைப் பற்றி தெளிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது விரைவான மற்றும் எளிமையான கடன் பெறும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், சிறு குறு நிறுவனங்கள் தங்கள் ஜிஎஸ்டி விற்பனை ரசீதுகளுக்கு கடன் பெற முடியும். கடன் தொகை ரூ. 1 லட்சம் வரை இருக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முழு செயல்முறையும் 15 நிமிடங்களுக்குள் செய்துவிடலாம். முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தக் கடன் வழங்கப்படுவதால், இதில் எந்தவிதமான மனித தலையீடும் இருக்காது.

இந்த புதிய லோன் வசதி குறித்து SBI-யின் தலைவர் தினேஷ் காரா பேசுகையில், "MSME Sahaj" என்பது டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் கடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் என்றும், எந்த வித மனிதத் தலையீடும் இல்லாமல் கடன் பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
SBI பேங்க் கூற்றுப்படி, கடன் பெற ஆட்டோமேட்டிக் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடன் பெற சிறு, குறு நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களுடைய தகுதியை மதிப்பீடு செய்வதற்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் GSTIN நம்பர், வங்கி கணக்கு விவரங்கள், வங்கி அறிக்கைகள், கிரெடிட் இன்பர்மேஷன் போன்ற தகவல்களை வைத்து கடன் பெற விண்ணப்பத்தவரின் தகுதி தானாகவே மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
MSME சஹஜ் லோன் பெற எப்படி விண்ணப்பிப்பது?: ஏற்கனவே SBI பேங்கில் கணக்கு வைத்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள், இந்த லோனை உடனடியாகப் பெற SBI யோனோ (SBI Yono) ஆப் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 45 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்த SBI, தற்போது 15 நிமிடங்களில் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது நிச்சயமாக சிறு தொழில்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும்.
கடன் வழங்குவதை விரைவுபடுத்துவதற்காக SBI புதிய முறையைக் கொண்டு வந்துள்ளது. ITR, GST ரிட்டர்ன் மற்றும் வங்கி கணக்கு அறிக்கை போன்ற நம்பகமான தகவல் ஆதாரங்களை பயன்படுத்தி கடன் தகுதி மதிப்பீடு செய்யப்படுகிறது.
SBI பேங்க் ஆட்டோமேட்டிக் கடன் மதிப்பீட்டு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், தேவையான தகவல்களை சமர்ப்பித்த பிறகு வெறும் 10 வினாடிகளில் கடன் வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும். இந்த முழு செயல்முறையும் மனித தலையீடு இல்லாமல் நடைபெறும்.


Click it and Unblock the Notifications