சிறு தொழில் செய்வோருக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனா பிரச்சனையை சமாளிக்க அதிரடி திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கொரோனா வைரஸ் பில்லியனர் முகேஷ் அம்பானி முதல் ரோட்டுக்கடை உரிமையாளர் வரை ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

ஏனெனில் அவரவர் அவர்களது தொழிலுக்கு ஏற்ப நஷ்டத்தினை கண்டனர்.

எனினும் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறு குறு தொழில் செய்வோரே. இந்த நிலையில் அவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது எனலாம்.

சிறு தொழில்களுக்கு கடன்

சிறு தொழில்களுக்கு கடன்

அதாவது அரசிடம் இருந்து தங்களுக்கு ஏதாவது சலுகை கிடைத்திடாத எனவும், அதிலும் நிதி ரீதியான எதிர்பார்புகள் மிக அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நாட்டில் முக்கிய உற்பத்தியாளர்களான இவர்களுக்கு, சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 15,000 கோடி ரூபாய் நிதியினை பெற்றுள்ள நிலையில், இவர்களுக்கு கடன் வழங்குவதாக அதிகரித்துள்ளது.

சிட்பி அறிவிப்பு

சிட்பி அறிவிப்பு

அதிலும் கொரோனாவின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவர்களுக்கு, இது மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், எம்.எஃப்.ஐ களுக்கு கடந்த ஏப்ரல் 22 அன்று வணிக வங்கிகளின் தலைவர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில், சிறு வணிகங்களுக்கு ஆதாரவாக சிறப்புத் திட்டங்களைத் தொடங்குவதாக சிட்பி கூறியது.

யாருக்கு கடன்

யாருக்கு கடன்

இது கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்கும். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி 15,000 கோடி ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது. இந்த திட்டங்கள் தகுதி வாய்ந்த அனைத்து நிறுவனங்களுக்கு தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறு நிறுவனங்களுக்கு ஆதரவு

சிறு நிறுவனங்களுக்கு ஆதரவு

சிறு குறு நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களைப் போல் அல்லாமல், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தவிர்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆக முதல் திட்டமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தொற்று நோயினால் எம்எஸ்எம்இக்களுக்கு உதவும் வகையில் பணப்புழக்கதினை வழங்குவதாகும். இவர்களுக்கு பைன் டெக் NBFCs மற்றூம் NBFCsக்கள் மூலம் பணப்புழக்க ஆதரவு வழங்கும்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் 17ம் தேதி அன்று, நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குவதாக அறிவித்த குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sidbi announces liquidity support scheme for small businesses

Following the Rs.15,000 cr of liquidity facility from the RBI, the Sidbi announced onward lending to small businesses, through banks, non-bank financiers and micro finance institutions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X