பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனர்களான குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் தங்களது சொந்த முதலீட்டு நிறுவனமான டைட்டன் கேப்பிட்டல் வாயிலாக, வீட்டு சேவை தளமான அர்பன் கம்பெனி-யில் தாங்கள் வைத்திருந்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்து முழுமையாக வெளியேறி உள்ளனர்.
இந்த பங்கு விற்பனை மூலம், 9 ஆண்டுகளுக்கு முன்பு செய்த அவர்களின் சிறிய அளவிலான முதலீடு சுமார் 200 மடங்கு அதிக லாபத்தை தற்போது ஈட்டியுள்ளனர்.

கூர்கிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்ட அர்பன் கம்பெனி-யில் குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் 2015 ஆம் ஆண்டு ரூ.57 லட்சம் முதலீடு செய்திருந்தனர். இந்த முதலீட்டை இதுவரையில் தொடாமல் அப்படியே வைத்திருந்தனர்.
கடந்த 9 வருடத்தில் அர்பன் கம்பெனி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்த வளர்ச்சியை பணமாக்க முடிவு செய்த இவரும், இந்த மாத தொடக்கத்தில் தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்காக, வை கேபிட்டலின் துணை நிறுவனமான தாரணா கேபிட்டல் உடன் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 50 மில்லியன் டாலருக்கு இரண்டாம் நிலை பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பங்கு விற்பனை நிறைவடைந்த, ரூ.57 லட்சம் முதலீடு தற்போது 200 மடங்கு உயர்ந்து மொத்தம் ரூ.111 கோடி லாபத்தை குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்த இரண்டாம் நிலை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டைட்டன் கேபிட்டலின் நிறுவனர்களுடன் சில அர்பன் கம்பெனி ஊழியர்களும் தங்கள் பங்கு விற்றுள்ளனர். அர்பன் கம்பெனி பங்குகளை வாங்கியதன் மூலம் தரணா கேபிட்டலின் நிறுவனர் மற்றும் மேனேஜிங் பார்ட்னரான வம்சி துவ்வூரி, உபர் கம்பெனி இயக்குநர் குழுவில் செயல்படாத இயக்குனராக இணைந்துள்ளார்.
குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் உருவாக்கிய டைட்டன் கேபிட்டல் 100 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட லாபத்தை ஈட்டியுள்ள மற்ற முதலீடுகளும் உள்ளது. இதில் முக்கியமாக ஒலா கேப்ஸ், ஆஃப் பிசினஸ் மற்றும் கிரெட்ஜெனிக்ஸ் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications