மொபைல் செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தினை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய உள்ளது.
அதன் முதற்கட்டமான நியூசிலாந்தின் முக்கிய நகரங்களான ஆக்லாந்து, கிறிஸ்ட்செர்ச் மற்றும் வெலிங்டன் ஆகிய இடங்களில் ஓலா சேவை அளிக்க உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பிரைன் டெவில்
நியூசிலாந்தில் ஓலா சேவையினைத் தொடங்க பிரைன் டெவில் என்பவரை மேலாளராக நியமித்துள்ளனர். இவர் 15 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தனது திறனை நிருபித்தவர் ஆவார்.
பாவிஷ் அகர்வால்
நியூசிலாந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இடையே சிறந்த மாற்றுப் போக்குவரத்துச் சேவையினை அளிக்கக் கூடிய வாய்ப்பு ஓலாவிடம் உள்ளது எனக் கண்டறிந்துள்ளோம். இதற்காக நியூசிலாந்து வாடிக்கையாளர்களின் பயணத் தேவை குறித்து ஆராய்ந்துள்ளோம். அதற்கு ஏற்றவாறு தரமான சேவையினை எங்களால் அளிக்க முடியும் என்று ஓலாவின் இணை நிறுவனரான பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சேவைகள்
ஓலா நிறுவனத்தின் ஆஸ்திரேலியா சேவை பிப்ரவரி மாதமும் இங்கிலாந்து சேவை ஆகஸ்ட் மாதமும் தொடங்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கிலான பயணங்களை ஓலா அளித்து வருகிறது.
நியூசிலாந்து
ஓலாவின் வருகை தரமான பயணச் சேவை அனுபவத்தினை அளிக்கும். நியூசிலாந்தில் குழுவை அமைத்து வணிகத்தினைப் பெருக்க ஆர்வமுடன் இருப்பதாகவும், தேசத்தின் உள்ளூர் போக்குவரத்துக் கட்டுமானத்திற்கு இது ஒரு நல்ல பங்களிப்பாக இருக்கும் என்றும் பிரைன் டெவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications